Published : 03 Aug 2017 08:56 AM
Last Updated : 03 Aug 2017 08:56 AM

அரசு பள்ளிகளில் நவீன கழிப்பறைகள்: தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை - அமைச்சர்கள் செங்கோட்டையன், சம்பத் நடத்தினர்

அரசுப் பள்ளிகளில் நவீன கழிப் பறைகள் கட்டும் திட்டத்துக்காக தனியார் நிறுவனங்களின் பிரதிநிதி களுடன் அமைச்சர்கள் செங் கோட்டையன், சம்பத் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்தும் முயற் சியில் பள்ளிக்கல்வித் துறை ஈடுபட் டுள்ளது. பாடத் திட்டத்தை தேசிய தரத்துக்கு உயர்த்தும் வகையில் அதற்காக குழு அமைத்து நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் விதமாக நிதி ஒதுக்கப்பட்டு கூடுதல் கட்டிடங்கள், சுற்றுச்சுவர் அமைத்தல், குடிநீர், கழிப்பறை வசதிகள் மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, தொழில் நிறுவனங்களும் பள்ளிகளுக்கு கூடுதல் கட்டிடங்கள், கழிப்பறை வசதிகளை செய்து தருகின்றன. அந்தவகையில், தமிழகத்தில் உள்ள 10 ஆயிரம் பள்ளிகளில் கட்டமைப்பு வசதி, நவீன கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கும் திட்டம் குறித்து பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் அரசு ஆலோசனை நடத்தியுள்ளது.

இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஆகியோர் தொழில் நிறுவனங்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினர். இதில் ரெனால்ட் நிசான், சாம்சங், ஹூண்டாய், செயின்கோபைன், டெய்ம்லர் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x