Published : 11 Aug 2017 09:41 AM
Last Updated : 11 Aug 2017 09:41 AM

2 ஆண்டுகள் படிப்பு: உதவி செவிலியர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை மாநகராட்சி சார்பில் தொடங்கப்பட உள்ள 2 ஆண்டு உதவி செவிலியர் பயிற்சி வகுப்பில் சேர மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் தண்டையார்பேட்டையில் உள்ள தொற்று நோய் மருத்துவமனையில் 2017-18-ம் ஆண்டுக்கான, 2 ஆண்டு உதவி செவிலியர் பயிற்சி (ANM Course) வகுப்பு தொடங்கப்பட உள்ளது. இக் கல்வியாண்டில் 40 மாணவி களுக்கான சேர்க்கை நடைபெறவுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் சேர, சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் பணியாளர்களின் வாரிசுகளுக்கும், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.

மேலும், அரசு மற்றும் அரசு சார்ந்த, பொது பள்ளிகளில் பயின்ற மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.

இந்தப் பயிற்சி வகுப்பில் சேர 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் ரூ.50 கட்டணம் செலுத்தி, இயக்குநர், தொற்று நோய் மருத்துவமனை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை, சென்னை- 600 081 என்ற முகவரியில், வேலை நாட்களில் காலை 10 முதல் மாலை 4 மணி வரை நேரடியாக விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். வரும் ஆகஸ்ட் 16 முதல் 31-ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் செப்டம்பர் 4-ம் தேதி மாலை 4 மணிக்குள் மேற்கூறிய முகவரியில் வழங்கப்பட வேண்டும். மேலும், விவரங்களுக்கு 044 25912686 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ள லாம்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x