இரு அணிகளையும் இணைக்கும் முயற்சி வெற்றி பெறும்: அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கருத்து

இரு அணிகளையும் இணைக்கும் முயற்சி வெற்றி பெறும்: அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கருத்து
Updated on
2 min read

அதிமுகவின் இரு அணிகளையும் இணைக்கும் முயற்சி வெற்றி பெறும் என அதிமுக எம்.எல்.ஏக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதிமுகவின் இரு அணிகளையும் இணைப்பதற்கான முயற்சிகளில் இரு தரப்பினரும் ஈடுபட்டு வரும் நிலையில் இது தொடர்பாக அதிமுக எம்.எல்.ஏக்கள் ‘தி இந்து’ விடம் கூறியதாவது:

அமைச்சர் கே.சி.வீரமணி:

இரண்டு அணியும் ஒன்றாக சேரு வது என்பது ஏற்கெனவே எதிர் பார்க்கப்பட்டதே. இரண்டு அணி களும் ஒன்றாக சேர இருப்பது எனக்கு மட்டும் அல்ல; தொண்டர் களுக்கும், பொதுமக்களுக்கும் மகிழ்ச்சியானது. இத்துடன் எம்.ஜி.ஆர் கண்ட இரட்டை இலையையும் நிச்சயம் மீட்போம்.

அமைச்சர் கடம்பூர் ராஜு:

இரு அணிகளும் இணைய பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. தற் போது ஆட்சிக்கு எவ்வித பிரச்சினை யும் இல்லை. பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன்தான் அதிமுக ஆட்சி நடைபெறுகிறது. பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு வர வேண்டும். டிடிவி தினகரன் தற்போது கட்சியில் இருந்து ஒதுங்கியிருக்கிறார். கட்சியில் இருந்து அவர் வெளியேற வில்லை.

பி.சத்யநாராயணன் (தியாக ராய நகர்):

அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதே எம்.எல்.ஏக்களின் விருப் பம். இணைந்து இருந்தால்தான் எதிரிகளின் சூழ்ச்சிகளை வென்று நல்லாட்சியைத் தொடர முடியும். இணைப்பு பேச்சுவாரத்தை நிச்ச யம் வெற்றிபெறும்.

விருகை வி.என்.ரவி (விருகம் பாக்கம்):

தங்கத் தாம்பளத்தில் வைத்து ஆட்சியை ஜெயலலிதா விட்டுச் சென்றுள்ளார். அதனைக் காப்பாற்றி 2021 வரை ஆட்சியை நடத்த வேண்டியது அனைத்து அதிமுக எம்.எல்.ஏக்களின் கடமை. இரு அணிகளில் இருப்பவர்கள் அண்ணன் தம்பிகளாக ஒரே குடும் பமாக இருந்தவர்கள்தான். நேரில் அமர்ந்து பேசினால் 10 நிமிடங்களில் பிரச்சினை முடிந்துவிடும்.

கே.எஸ். விஜயகுமார் (கும்மி டிப்பூண்டி):

இரு அணிகளும் ஒன்றிணையும் முயற்சிகள் இரு தரப்பிலும் சுமுக முறை யில் நடக்கின்றன. இம்முயற்சி வெற்றியடையும் என எதிர்ப்பார்க் கிறோம். தற்போது அதிமுகவில் உள்ள இரு அணிகளும் ஒன்றி ணைந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்பது. அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்களின் விருப்ப மாக உள்ளது.

எம். கோதண்டபாணி (திருப் போரூர்):

எந்த அணியாக இருந்தா லும் ஜெ.வின் ஆட்சியை, கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். சிலர் உள்நோக்கத்துடன் நிபந்தனைகளை வைப்பது சரி யில்லை. ஜெயலலிதாவின் ஆட் சியை, கட்சியை காப்பாற்றுவதுடன், இரட்டை இலை சின்னத்தையும் மீட்க வேண்டும் என்பதே என் விருப்பமாகும்.

எம்.கீதா, (கிருஷ்ணராய புரம்)

பல்வேறு சோதனை களை சந்தித்துவிட்டோம். இதற்கெல்லாம் தீர்வு காணும் வகையில் பிரிந்து சென்றவர் களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதிமுகவை வலுப்படுத்தி, ஒற்று மையாக செயல்படுவோம் என்பது உறுதி.

பார்த்திபன் (சோளிங்கர்):

இரண்டு அணிகள் இணைப்பு ஏற்படுவது மிகவும் சந்தோஷம். முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடுக்கும் முடிவுக்கு நாங்கள் முழுமையாக கட்டுப்படுவோம். மக்கள் பணிக்காகவே நாங்கள் இருக்கிறோம்.

சு.ரவி (அரக்கோணம்):

இரு அணிகளின் இணைப்பு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழுவினர் முறைப்படி பேச்சுவார்த்தை நடத்துவார்கள். குழுவினர் எடுக் கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்பட்டு நடப்போம்.

பாலசுப்பிரமணியம் (ஆம்பூர்):

இரண்டு அணிகளும் இணைவது குறித்து ஏற்கெனவே எங்களிடம் கருத்து கேட்டனர். எங்களின் நிலைப்பாட்டையும் தெரிவித்து விட்டோம். இரண்டு துருவங்களாக இருந்தவர்கள் ஒன்றாக இணையவிருப்பது மகிழ்ச்சி தருகிறது. இது எதிர் பார்த்த ஒன்றுதான்.

பன்னீர்செல்வம் (கலசப்பாக் கம்):

எந்த நிபந்தனையும் இல்லா மல் இரு அணிகளும் இணைந்து செயல்பட வேண்டும். கட்சியின் அங்கீகாரத்தைப் பெற்று, இரட்டை இலை சின்னத்தை திரும்பப் பெற வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம்.

வி.டி. கலைச்செல்வன், (விருத் தாசலம்):

பிரிந்து சென்றவர்கள் அனைவருமே ஜெயலலிதாவால் ஓரம்கட்டப்பட்டவர்கள். பெரும் பான்மையான உறுப்பினர்கள் ஜெயலலிதாவின் ஆட்சியை வழிநடத்திச் சென்று கொண்டிருக் கின்றனர். பிரிந்து சென்றவர்கள் நிபந்தனை யுமின்றி எங்களோடு இணைய வேண்டும்.

ஆர்.குமரகுரு, (உளுந்தூர் பேட்டை):

சசிகலா, தினகரனிடம் ராஜினாமா கடிதம் தற்போது கேட்பது ஏற்புடையது அல்ல. அவரை பொதுச்செயலாளர் ஆக்கி யதே மதுசூதனும், பன்னீர்செல்வ மும்தான். பிரிந்து சென்றவர்கள் நிபந்தனையின்றி வந்தால் கட்சியில் இணைந்து செயல்படலாம்.

ஏ.பிரபு, (கள்ளக்குறிச்சி):

ஜெயலிதா இருந்திருந்தால் ஆளா ளுக்கு பேசமுடியுமா என்பதை கட்சியின் மூத்தத் தலைவர்கள் சிந்திக்க வேண்டும். ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் மறைந்த முதல்வ ரின் ஆன்மா சாந்தியடையும்.

பி.சத்யா, (பண்ருட்டி):

ஓ.பன்னீர்செல்வம் வைக்கக் கூடிய நிபந்தனைகள் ஏற்கக் கூடியது அல்ல. கட்சி பிளவுபடக் கூடாது. அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதுவே ஜெயலலிதாவுக்கு நாம் செய்யும் நன்றிக் கடன். முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவுதான் எங்களது முடிவும்.

மனோகரன் (வாசுதேவநல் லூர்):

கட்சியும், ஆட்சியும் உடை யாமல் இருக்க அதிமுகவில் இரு அணிகளும் இணைவது நல்லது. அவ்வாறு இணைவதற்கு ஓபிஎஸ் அணி சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அதுகுறித்து இரு அணி சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவினர் பேசுவார்கள்.

செல்வமோகன்தாஸ் (தென் காசி):

அதிமுக எஃகு கோட்டை என்றால் இரு அணிகளும் இணை வதுதான் நல்லது. நான் ஜெய லலிதாவால் அடையாளம் காணப் பட்டவன். அவர்தான் எனது தலைவி. எம்.ஜி.ஆர்.தான் எனது தலைவர்.

இன்பதுரை (ராதாபுரம்):

இணைவதுதான் எல்லாருடைய விருப்பமும். மேற்கொண்டு இது குறித்து கருத்து கூற விரும்ப வில்லை.

ஆர். சுந்தர்ராஜன் (ஒட்டப்பிடா ரம்):

ஜெயலலிதாவால் கட்டிக்காக் கப்பட்ட அதிமுகவில் இரு அணிகளும் விட்டுக்கொடுத்து இணைய வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in