

நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்துக்கு உட்பட்டது தேவர்சோலை. இங்குள்ள செறுமுள்ளி பகுதியில் துரைசாமி என்பவருக்குச் சொந்தமான தோட்டத்துக்குள் நேற்று அதிகாலை இரு யானைகள், ஒரு குட்டி யானை புகுந்துள்ளன.
மேய்ச்சலில் ஈடுபட்டிருந் தபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து இரு யானைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. இதுதொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
கூடலூர் வனச்சரகர் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதுதொடர்பாக வனச்சரகர் ராமகிருஷ்ணன் கூறும்போது, ‘இறந்த ஆண் யானைக்கு 12 வயதும், பெண் யானைக்கு 18 வயதும் இருக்கும். யானைகள் பாக்கு மரத்தை உடைத்தபோது, அதன் அருகே இருந்த மின் கம்பத்தில் விழுந்துள்ளது. மேலும், மின் கம்பிகள் அறுந்து வேலியில் விழுந்தால், மின்சாரம் பாய்ந்து இரு யானைகளும் உயிரிழந்துள்ளன.
இது விபத்து என்பதால், தோட்ட உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை. பிரேத பரிசோதனைக்கு பின்னர், இரு யானைகளின் உடல்களும் அங்கேயே புதைக்கப்பட்டன’ என்றார்.