

தெற்கு ரயில்வேயின் புதிய கூடுதல் பொதுமேலாளராக சுகேஷ் குமார் சர்மா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர், இதற்கு முன்பு தெற்கு மத்திய ரயில்வேயில் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றியவர். ரோர்கியில் உள்ள ஐஐடியில் எம்.டெக் படித்தவர்.
கடந்த 1979-ம் ஆண்டு கிழக்கு ரயில்வேயில் பணியை தொடங்கிய இவர், இந்திய ரயில்வே துறையில் தலைமை பொது பொறியாளர், திட்டமிடல், மற்றும் வடிவமைப்பு பிரிவின் தலைமை பொறியாளர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்துள்ளர்.