

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் தேதி ஜனவரி மாதம் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தண்டனை வழங்கியதையடுத்து ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ.வும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா எம்.எல்.ஏ. பதவியை இழந்தார்.
இதனையடுத்து ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தல் எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். அப்போது அவர்: "மார்ச் மாதம் வரை தேர்தல் நடத்த அவகாசம் இருக்கிறது. எனவே ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலை ஜனவரியில் நடத்த வாய்பிருக்கிறது" என்றார்.
மேலும், வண்ண வாக்காளர் அடையாள அட்டை தயார்நிலையில் உள்ளதாகவும், புதிதாக பதிவு செய்யும் வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டை வழங்கப்படும் எனவும் கூறினார்.