Published : 20 Aug 2017 09:24 AM
Last Updated : 20 Aug 2017 09:24 AM

கோயம்பேடு காய்கறிச் சந்தையில் தக்காளி, வெங்காயம் விலை குறைவு

கோயம்பேடு காய்கறிச் சந்தையில் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை கடந்த வாரத்தை விட இந்த வாரம் சற்று விலை குறைந்து, முறையே கிலோ ரூ.45, ரூ.30 என விற்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக காய்கறி வியாபாரிகளிடம் கேட்டபோது, தற்போது தக்காளி மற்றும் வெங்காய வரத்து சற்று அதிகரித்திருப்பதால், அவற்றில் விலை ரூ.4 முதல் ரூ.5 வரை குறைந்துள்ளது என்றனர்.

சாம்பார் வெங்காயம் ரூ.85, கத்தரிக்காய் ரூ.30, உருளைக் கிழங்கு ரூ.15, அவரைக்காய் ரூ.45, வெண்டைக்காய் ரூ.15, முள்ளங்கி ரூ.15, பாகற்காய் ரூ.15, பீன்ஸ் ரூ.50, முட்டைக் கோஸ் ரூ.7, கேரட் ரூ.30, பீட்ரூட் ரூ.25, புடலங்காய் ரூ.15, முருங்கைக்காய் ரூ.28, பச்சை மிளகாய் ரூ.35-க்கு விற்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x