

தியாகராய நகரில் உள்ள ‘தி சென்னை சில்க்ஸ்’ கட்டிடம் கடந்த மே 31-ம் தேதி தீ விபத்துக்குள் ளானது. இதனால் சேதமடைந்த கட்டிடம் இடித்து தரைமாக்கப் பட்டது. இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட முதல் பாதுகாப்புப் பெட்டகத்திலிருந்து, பத்திரங்கள், சான்றிதழ்கள் உள்ளிட்டவை கருகிய நிலையில் மீட்கப்பட்டன. மேலும் 2 பாதுகாப்பு பெட்டகங்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கி யிருந்தன.
இந்நிலையில் கடந்த வாரம் 1.5 டன் எடையுள்ள மற்றொரு பாது காப்புப் பெட்டகம் கண்டெடுக் கப்பட்டது. அதிலிருந்து கிலோ கணக்கில் நகைகள் மீட்கப்பட்டன. இந்தப் பெட்டகத்தில் 400 கிலோ தங்க நகைகளும், 2 ஆயிரம் கிலோ வெள்ளியும் இருந்ததாக கூறப்பட்டது. இதன் மதிப்பு ரூ.20 கோடி வரை இருக்கும் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில், இடிபாடுகள் அகற்றப்பட்டு லாக்கர்கள் வைக் கப்பட்டிருந்த பகுதியை, தனியார் நிறுவன ஊழியர்கள் அடைந்த போது, அந்த அறை தீயில் சேத மடைந்திருந்தது. அந்த அறையி லிருந்த ஒரு பெட்டகம் சேத மடைந்து, தங்க நகைகள் வெளியே விழுந்து தீயில் கருகி குப்பைக் கூளத்தோடு கலந்திருந்தன. எனவே, இடிபாடுகளை அகற்றும் பணியில் உள்ள தொழிலாளர்கள், தங்கம் கலந்த இடிபாடுகளை பக் கெட்களில் சேகரித்து வருகின் றனர். அவை உருக்கப்பட்டு தங் கத்தை தனியாகப் பிரித்தெடுக் கும் பணி தொடங்கியுள்ளது.