

அரசு சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு சட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக் கான தரவரிசைப் பட்டியல் மற்றும் கட் ஆப் மதிப்பெண் நேற்று வெளி யிடப்பட்டது. கல்லூரியை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்குகிறது.
தமிழகத்தில் சென்னை, செங் கல்பட்டு, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் அரசு சட்டக் கல்லூரி கள் உள்ளன. இக்கல்லூரிகளில் 5 ஆண்டு சட்டப் படிப்பில் (பிஏ.எல்எல்பி) 1,292 இடங்கள் இருக்கின்றன. நடப்பு கல்வி ஆண்டில் 5 ஆண்டு சட்டப் படிப்பில் சேர 9,500 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
இந்த நிலையில், அவர்களின் தரவரிசைப் பட்டியல் மற்றும் கட் ஆப் மதிப்பெண் பட்டியலை தமிழ் நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைகக்கழகம் நேற்று வெளி யிட்டது. இந்த பட்டியலை பல் கலைக்கழகத்தின் இணைய தளத்தில் (www.tndalu.ac.in) மாண வர்கள் தெரி்ந்துகொள்ளலாம்.
விரும்பும் கல்லூரியை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்கி 5-ம் தேதி முடிவடைகிறது. பொதுப் பிரிவினருக் கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2-ம் தேதி காலை 9 மணிக்கும் எஸ்சி, எஸ்டி வகுப் பினருக்கான கலந்தாய்வு 3-ம் தேதி காலை 9 மணிக்கும் எம்பிசி, டிஎன்சி, பிசி (முஸ்லிம்) வகுப்பினருக்கான கலந்தாய்வு 4-ம் தேதி காலை 9 மணிக்கும் பிசி பிரிவினருக்கான கலந்தாய்வு 5-ம் தேதி காலை 9 மணிக்கும் நடைபெற உள்ளன.
அரசு விதிமுறைப்படி மொத்த இடங்களில், 4 சதவீத இடங்கள் தொழிற்கல்வி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. கலந்தாய்வுக் கான அழைப்புக் கடிதம் மாண வர்களுக்கு தபால் மூலம் அனுப் பப்பட்டு வருகிறது. உரிய கட் ஆப் மதிப்பெண்ணுக்குள் இருந்து அழைப்புக் கடிதம் கிடைக்கவில்லை என்றாலும் குறிப்பிட்ட நாளில் கலந் தாய்வுக்கு நேரடியாக வந்துவிடலாம்.
இதனை சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கை தலைவர் வி.பாலாஜி தெரிவித்துள்ளார்.