

கிராம பண்பாட்டில்தான் நாட்டின் உண்மையான எழுச்சி இருக்கிறது என்று ஆர்எஸ்எஸ் தேசிய தலை வர் மோகன் பாகவத் தெரிவித்தார்.
ஆர்எஸ்எஸ் தேசிய நிர்வாகி சீதாராம் சுவாமி, கடந்த 2012-ம் ஆண்டு கன்னியாகுமரியில் இருந்து உலக நன்மைக்காக பாதயாத்திரை தொடங்கினார். இமயமலை வரை சென்று நேற்று கன்னியாகுமரியில் தனது பாத யாத்திரையை அவர் நிறைவு செய்தார்.
இதை முன்னிட்டு நாகர்கோவி லில் ஆர்எஸ்எஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து மோகன் பாகவத் பேசியதாவது:
சீதாராம் சுவாமி கிராமங்கள் தோறும் சென்று மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார். இன்று மூன்று விதமான பிரச்சினைகள் இருக்கின்றன. ஒன்று நான் பெரியவன் எனும் அகங்காரத்தால் ஏற்படும் பிரச்சினை. இரண்டாவது சுயநலம். மனிதருக்குள் வேறுபாடு கள் பார்ப்பது மூன்றாவது பிரச் சினை.
வளர்ச்சி ஒன்றுதான் முக்கியம் என உலக நாடுகள் கருதுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறைவாக இருப்பது நம் நாட்டில் தான். வளர்ச்சி கொண்டு வர வேண்டும்.
நல்ல எண்ணம் கொண்டவர் களுக்கு மட்டும்தான் மதிப்பு உருவாகும். நாம் மண்ணை வணங்கிதான் எல்லாவற்றையும் செய்கிறோம். சுற்றுச்சூழலுடன் இணைந்து வாழ வேண்டும். கிராமம், காடு இல்லாவிட்டால் நாடு சுபிட்ஷமாக இருக்க முடியாது. கிராம பண்பாட்டில்தான் நாட்டின் உண்மையான எழுச்சி இருக்கிறது. அன்பு, அமைதி, சந்தோஷம் உருவாக நாம் பணி செய்ய வேண்டும் என்றார் அவர்.
புத்தகம் வெளியீடு
ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னிட்டு மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் எழுதிய ‘ராமானு ஜர்’ என்ற புத்தகத்தை மோகன் பாகவத் வெளியிட, வெள்ளிமலை சுவாமி சைதன்யானந்தஜி மஹராஜ் பெற்றுக்கொண்டார்.