

உடான் திட்டத்தின்கீழ் சேலம், ஓசூர், நெய்வேலியில் குறைந்த கட்டணத்தில் விமானங்களை இயக்க மத்திய அரசு சம்மதித் திருப்பதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், ‘‘தமிழக அரசு நிலம் கையகப்படுத்தி கொடுத் தால்தான் மத்திய அரசின் உடான் திட்டத்தின்கீழ் விமான நிலையங்கள் அமைக்க முடியும் என்ற நிலை உள் ளது. அதற்கான முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளதா? வேலூரில் ஏற்கெனவே விமான நிலையம் உள்ளது. சிறிய விமானங்கள் இறங்கும் வசதி உள்ளது. இதனை மேம்படுத்தி உடான் திட்டத்தின்கீழ் விமானங்களை இயக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?’’ என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் ‘‘கடந்த சில வாரங்களுக்கு முன்பு மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் தமிழக அரசு அதிகாரி களுடன் உடான் திட்டத்தை செயல் படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்கள். முதல் கட்டமாக சேலம், ஓசூர், நெய்வேலி ஆகிய இடங் களில் விமான சேவை தொடங்க மத்திய அரசு சம்மதம் தெரிவித் துள்ளது. உடான் திட்டத்தின்கீழ் இயக்கப்படும் விமானங்களின் கட்டணம் ரூ. 2 ஆயிரத்து 500-க்குள் இருக்க வேண்டும். மற்ற இடங்களில் உடான் விமான சேவை தொடங்குவது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்’’ என்றார்.