Published : 13 Jul 2017 08:27 AM
Last Updated : 13 Jul 2017 08:27 AM

ரூ.10 ஆவின் பால் திட்டம் மக்களை ஏமாற்றும் அறிவிப்பு: பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு

ரூ.10-க்கு ஆவின் பால் பாக்கெட் அறிமுகப்படுத்தும் திட்டம், புதிய திட்டம் அல்ல என்று தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச் சங்கம் குற்றம்சாட்டி உள்ளது.

இதுதொடர்பாக சங்க மாநில தலைவர் பொன்னுசாமி நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழக சட்டப்பேரவையில் பால் வளத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது பேசிய அமைச் சர் ராஜேந்திர பாலாஜி ‘தனியார் பால் நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க 10 ரூபாய்க்கு 225 மிலி அளவுள்ள ஆவின் பால் அறிமுகப் படுத்தப்படும்’ என்று அறிவித்துள் ளார். இது மக்களை ஏமாற்றுகின்ற, குழப்புகின்ற அறிவிப்பாகும்.

பெரும்பாலான மாவட்டங்களில் 200 மிலி (ரூ.9), 250 மிலி (10.50/11.00 ரூபாய்) பால் பாக்கெட்டுகளை ஆவின் நிறுவனம் பால் முகவர் களுக்கு விற்பனை செய்து வரு கிறது. ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் திட்டத்தை புதியது போன்று அறிவித்திருப்பது தவறான முன்னுதாரணம் ஆகும். இந்த அறி விப்புக்கு தமிழ்நாடு பால் முகவர் கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கண்டனத்தைத் தெரிவித்து கொள்கிறோம். இந்த அறிவிப்பின் மூலம் பால்வளத் துறை அதிகாரி களோடு அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு இணக்கமான சூழல் நிலவவில்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

மானியக் கோரிக்கையின் போது பால் கலப்பட சிறப்பு தடைச் சட்டம், தனி நல வாரியம் போன்ற கோரிக் கைகள் தொடர்பாக எவ்வித அறிவிப் பும் வெளியிடாதது ஏமாற்றம் அளிக் கிறது. இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

குழப்பம் வேண்டாம்: அரசு விளக்கம்

சென்னையில் இதுவரை ரூ.10 விலையில் பால் பாக்கெட் விற்பனைக்கு வந்ததில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது: சென்னையில் கடந்த பிப்ரவரி 2015-ல் 250 மிலி நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.11-க்கு விற்கப்பட்டது. விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லாததால், அத்திட்டம் நிறுத்தப்பட்டது. தற்போது ரூ.10 விலையில் பால் பாக்கெட் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் என்று பால்வளத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

சில மாவட்டங்களில் 250 மிலி பால் ரூ.10.50 முதல் ரூ.11 வரை விற்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது அறிமுகப்படுத்தப்பட உள்ள ரூ.10 விலை உள்ள பால் 225 மிலி கொண்டது. இதற்கு முன்பு சென்னையில் இதுபோல் விற்பனைக்கு வந்தது இல்லை. எனவே விவரங்களை முழுமையாக தெரிந்துகொள்ளாமல் வெளியிடப்படும் செய்தி களைக் கண்டு மக்கள் யாரும் குழப்பம் அடையத் தேவையில்லை. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x