குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் தேர்வு: ஆளுநர், முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் தேர்வு: ஆளுநர், முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

Published on

குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக் கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந் துக்கு தமிழக முதல்வர் கே.பழனி சாமி உள்ளிட்டோர் வாழ்த்து தெரி வித்துள்ளனர்.

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ்:

குடியரசுத் தலைவராக தாங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள தற்கு எனது மனப்பூர்வமான வாழ்த் துகள். தங்களது சட்ட அறிவு, ஆளு நர், நாடாளுமன்ற உறுப்பினராக தாங்கள் பணியாற்றிய அனுபவம் ஆகியவை இந்தியாவுக்கு மேலும் பெருமை சேர்க்கும். தங்களது மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.

முதல்வர் கே.பழனிசாமி:

குடியரசுத் தலைவர் தேர்தலில் தாங்கள் அமோக வெற்றி பெற் றுள்ளதற்கு எனது மனமார்ந்த வாழ்த் துகள். குடியரசுத் தலைவராக தாங் கள் பணியாற்றும் காலத்தில் வர லாறு படைக்க எனது சார்பாகவும், தமிழக மக்கள் சார்பாகவும் வாழ்த் துகிறேன்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்:

இந்தியாவின் 14-வது குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம் நாத் கோவிந்த் வெற்றி பெற்றார் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந் தேன். ராம்நாத் கோவிந்த் தனது மிகச் சிறந்த சேவையால், பெயரும், புகழும் பெற வேண்டுமென நெஞ் சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்:

குடியரசுத் தலை வர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ராம்நாத் கோவிந்துக்கு திமுக சார்பிலும், தலைவர் மு.கருணாநிதி சார்பிலும் வாழ்த்துகள். அரசியல் அமைப்புச் சட்டத்தின் மாண்புகளை நிலைநாட்டி, மதச்சார்பற்ற தன்மை உள்ளிட்ட நாட்டின் பன்முகத் தன் மையைப் போற்றிப் பாதுகாப்பதில் அவர் உறுதியாக இருப்பார் என்று நம்புகிறேன்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்:

குடிய ரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த், அனைத்து தரப்பு மக்களுக்கும் அரணாக பணியாற்றி இந்தியா ஏற்றம் பெற வழிநடத்துவார் என்பது உறுதி. தமிழகத்தில் ஆதரவு அளித்த முதல்வர் கே.பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எனது நன்றி.

மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன்:

குடியரசுத் தலைவ ராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்துக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகள்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்:

குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த் நியாயமாக, நடுநிலை யோடு செயல்படுவார் என்ற நம் பிக்கை உள்ளது. அவருக்கு எனது வாழ்த்துகள்.

இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.

பிரதமருக்கும் வாழ்த்து

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றதற்காக பிரதமர் நரேந்திரமோடியை முதல் வர் கே.பழனிசாமி நேற்று தொலை பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த் துகளைத் தெரிவித்தார். இத்தக வலை தமிழக அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in