

கும்மிடிப்பூண்டி அருகே காரில் கடத்தப்பட்ட 370 கிலோ செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஐய்யர்கண்டிகை, கவரப் பேட்டை - சத்தியவேடு சாலையில் நேற்று அதிகாலை கவரப்பேட்டை போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, வாகன சோதனை நடத்தப்பட்ட இடத்துக்கு சிறிது தூரத்துக்கு முன் சந்தேகத்துக்கு இடமான வகையில் சொகுசு கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தன.
இதனால், சந்தேக மடைந்த போலீஸார் கார், மோட்டார் சைக்கிள் நின்ற இடத்தை நோக்கி செல்லத் தொடங்கினர். இதனையறிந்து, காரில் இருந்த இருவர் இறங்கி தப்பியோடிவிட்டனர்.
அதேபோல், மோட்டார் சைக்கிளில் இருந்த இருவர், மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றுவிட்டனர்.
போலீஸார் சோதனை
தொடர்ந்து, போலீஸார் சொகுசு காரை சோதனை செய்தனர். அச்சோ தனையில், 370 கிலோ எடை கொண்ட 13 செம்மரக் கட்டைகள் இருந்தது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.2.50 லட்சம் இருக்கும் என கூறப்பட்டது.
அந்த செம்மரக் கட்டைகளையும், காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், ஆந்திர மாநிலத்திலிருந்து, சென்னைக்கு செம்மரக் கட்டைகள் கடத்தி வரப் பட்டுள்ளது தெரிய வந்தது.
பிறகு, பறிமுதல் செய் யப்பட்ட செம்மரக் கட்டைகள் மற்றும் காரை கும்மிடிப்பூண்டி வனத் துறையினரிடம் கவரப் பேட்டை போலீஸார் ஒப் படைத்தனர். மேலும், தப்பியோடிய செம்மரக் கட்டை கடத்தல் கும்பலை வனத் துறை அதிகாரிகள் தீவிரமாக தேடி வரு கின்றனர்.