

மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா தமிழக அரசின் சார்பில் கடந்த 30-ம் தேதி தொடங்கி கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலாளர் சசிகலாவின் தம்பி வி.திவாகரன் ஏற்பாட்டின்பேரில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகர அதிமுக சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மன்னார்குடியில் வரும் 15-ம் தேதி பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது. அன்று, மன்னார்குடியில் எம்ஜிஆர் சிலை திறக்கப்படுவதுடன், பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட உள்ளன.
இதற்கான ஏற்பாடுகளைச் செய் வதற்கும், விழா அரங்கம் அமைப் பது குறித்து திட்டமிடுவதற்கும் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் அருகே தேரடியில் உள்ள நகராட்சி கலையரங்கம் மற்றும் அதையொட்டியுள்ள திடலை வி.திவாகரன் நேற்று பார்வையிட்டார். அங்கு பந்தல் அமைப்பது குறித்து, பந்தல் அமைப்பாளர் வடுவூர் பந்தல் சிவாவுடன் ஆலோசனை நடத்தினார்.