சென்னையில் சிறிய பேருந்துகளுக்கு அதிகரித்துவரும் வரவேற்பு: ஓராண்டில் 4.32 கோடி பேர் பயணம்; ரூ.30.48 கோடி வருவாய்

சென்னையில் சிறிய பேருந்துகளுக்கு அதிகரித்துவரும் வரவேற்பு: ஓராண்டில் 4.32 கோடி பேர் பயணம்; ரூ.30.48 கோடி வருவாய்
Updated on
1 min read

சென்னையில் இயக்கப்படும் 200 சிறிய பேருந்துகளில் கடந்த நிதி ஆண்டில் மட்டும் 4 கோடியே 32 லட்சத்து 31 ஆயிரத்து 709 பேர் பயணம் செய்துள்ளனர். இதன்மூலம் ரூ.30.48 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

சென்னை மாநகர மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலும், போக்குவரத்து இணைப்பில்லா பகுதிகளிலிருந்து அருகிலுள்ள பஸ் நிலையம், ரயில் நிலையம் மற்றும் விமான நிலையத்தை இணைக்கும் வகையிலும் தற்போது 200 சிறிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

சிறிய பேருந்தில் 27 பேர் உட்கார்ந்து செல்லலாம். இதில், குறைந்தபட்ச கட்டணம் ரூ.5. அதற்கு மேல் ரூ.6, ரூ.8, ரூ.9 என்று வசூலிக்கப்படுகிறது.

சென்னையில் கோடம்பாக்கம், அம்பத்தூர், மாங்காடு, திருவேற் காடு, வேளச்சேரி, கோயம்பேடு, பெரம்பூர், மேடவாக்கம், அஸ்தினா புரம், ஆவடி, பூந்தமல்லி, பெருங் களத்தூர் உட்பட பல்வேறு இடங்களில் சிறிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக பேருந்து நிலையம், மின்சார ரயில் நிலையம், மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் சிறிய பேருந்துகள் இயக்கப்படு கின்றன.

சிறிய பேருந்துகளில் தினமும் சுமார் 1,29,436 பேர் பயணம் செய்கின்றனர். கடந்த நிதி ஆண்டில் மட்டுமே 4 கோடியே 32 லட்சத்து 31 ஆயிரத்து 709 பேர் பயணம் செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.30 கோடியே 48 லட்சத்து 8 ஆயிரத்து 311 வருவாய் கிடைத்துள்ளது.

இது தொடர்பாக போக்கு வரத்து கழக உயர் அதிகாரி களிடம் கேட்ட போது, ‘‘மாநகர போக்குவரத்துக் கழகத்தால் இயக் கப்படும் சிறிய பேருந்துகளுக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது.

புதிதாக 100 சிறிய பேருந்துகள்

முக்கிய ரயில் நிலையங்கள், பேருந்து நிலையம், விமான நிலை யங்களை இணைப் பதால் மக்க ளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதற்கிடையே, அடுத்தகட்டமாக 100 சிறிய பேருந்துகள் இயக்குவதற்கான பணிகள் நடந்து கொண்டிருக் கின்றன.

இதற்கான புதிய வழித்தடங் களைத் தேர்வு செய்யும் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன. அடுத்த சில மாதங்களில் மக்களின் பயன்பாட்டுக்கு இவை வருகின்றன” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in