Last Updated : 03 Jul, 2017 09:53 AM

 

Published : 03 Jul 2017 09:53 AM
Last Updated : 03 Jul 2017 09:53 AM

அரசியல் நெருக்கடிகளில் இருந்து தப்பிக்க மத்திய அரசு பணிக்கு செல்லும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்

அரசியல் சூழலில் இருந்து தப்பிக்கவும், தொடர்புகளை விரிவுபடுத்திக் கொள்ளவும் தமிழக பிரிவு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் 40-க்கும் மேற்பட்டோர் மத்திய அரசுப் பணிக்கு சென்றுள்ளனர்.

தமிழக பிரிவில் தற்போது 285 ஐஏஎஸ் அதிகாரிகள், 230 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளனர். ஐஏஎஸ் அதிகாரிகளில் 23 பேர் பயிற்சியில் உள்ளனர். அதேபோல, ஐபிஎஸ் அதிகாரிகளில் தற்போது தேர்வானவர்களும் பயி்ற்சி அதிகாரி களாக பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வருகின்றனர்.

தமிழகத்தில் பொதுவாக ஆட்சி மாற்றம் ஏற்படும்போது ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்படு வது வழக்கம். அத்துடன் 3 ஆண்டு கள் ஒரே துறையில் பணியாற்றி யவர்கள், பிரச்சினைகளில் சிக்கு பவர்கள் போன்ற காரணங்களாலும் அதிகாரிகள் மாற்றப்படுகின்றனர்.

சமீபத்தில்கூட 20-க்கும் மேற் பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப் பட்டனர். இருப்பினும், இன்னும் சில துறைகளுக்கு செயலர்கள் நியமிக்கப்படவில்லை. ஒரு ஐஏஎஸ் அதிகாரியே சில துறைகளுக்கு பொறுப்பு அதிகாரியாக பணி யாற்றி வரும் சூழல் உள்ளது. குறிப்பாக, வேளாண் துறை செயலாளரான ககன்தீப் சிங் பேடி, கால்நடை, பால்வளம், மீன்வளத் துறைகளின் செயலராகவும் கூடுத லாக பொறுப்பு வகிக்கிறார். மாற் றுத்திறனாளிகள் நலத்துறை உள் ளிட்ட சில துறைகள், பொதுத்துறை நிறுவனங்களில் தலைவர், மேலாண் இயக்குநர் போன்ற பணி யிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

ஒருபக்கம் காலிப் பணியிடங் ளுக்கு தகுதியான அதிகாரிகள் நியமிக்கப்படாத நிலையில், தமிழக பிரிவு ஐஏஎஸ் அதிகாரிகளில் 30 பேர் மத்திய அரசுப் பணி மற்றும் சொந்த மாநில அயல்பணிகளில் உள்ளனர். இவர்களில் கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்தில் உள்ளவர்கள் 7 பேர், முதன்மைச் செயலர் அந்தஸ்தில் உள்ளவர்கள் 12 பேர். இவர்கள்தான், தமிழகத் தில் முக்கிய துறைகளில் செயலர் களாக பதவி வகிக்க தகுதியான வர்கள்.

முதல்வரின் செயலர் நிலை 2-ல் உள்ள ஷிவ் தாஸ் மீனாவும் விரைவில் மத்திய அரசுப் பணிக்கு செல்ல உள்ளார். மேலும், சில துறைகளின் தலைவர்கள் மத்திய அரசுப் பணிக்கு தங்களை விடுவிக் கும்படி கோரியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அரசியல் நெருக்கடிகளில் இருந்து தப்பிக்க வும், சொந்த காரணங்களுக்காகவும் அவர்கள் இந்த முடிவை எடுப்பதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக, அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘அரசியல் சூழல் கருதியே பலரும் மத்திய அரசுப் பணிக்கு செல்ல விண்ணப்பிக்கின்றனர். ஆனால், அரசு விரும்பினால் மட்டுமே அவர்கள் செல்ல முடியும். சிலர் சொந்த காரணங்களுக்காகவும், தொடர்புகளை விரிவுபடுத்திக் கொள்ளவும் செல்கின்றனர். மேலும், தலைமைச் செயலாளர் நியமனத் தில், மத்திய அரசுப் பணியில் இருந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்த காரணங் களுக்காகவும் மத்திய அரசுப் பணிக்கு செல்வதுண்டு. சலுகைகள் பெறுவதற்காக செல்பவர்கள் குறைவு. இவ்வாறு முக்கியமான அதிகாரிகள் சிலர் செல்லும்போது, துறைகளில் திறமையான அதிகாரி கள் பற்றாக்குறை ஏற்பட்டுவிடு கிறது’’ என்றார்.

வேறு மாநிலங்களில் இருந்து ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற் றாலும் வட மாநில ஐபிஎஸ் அதிகாரி கள் பணி செய்ய அதிகம் விரும்பும் மாநிலம் தமிழகம். பல மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்து பணிபுரியும் ஐபிஎஸ் அதி காரிகள் வெளிப்படையாகவே இதை தெரிவித்துள்ளனர். இருப்பி னும் தற்போது அதிகளவில் மத்திய அரசுப் பணிகளுக்கு செல்கின்றனர்.

ஐபிஎஸ் அதிகாரிகளை பொறுத் தவரை, பெரும்பாலும் சிபிஐ உள் ளிட்ட மத்திய அரசின் குற்றப் புலானய்வு பிரிவு, சிஆர்பிஎப் உள்ளிட்ட துணை ராணுவப்படை யில் உயர் பதவிக்கு செல்கின்றனர். தற்போது, டிஜிபி அந்தஸ்தில் உள்ள அர்ச்சனா ராமசுந்தரம், கூடுதல் டிஜிபியாக இருந்த சஞ்சய் அரோரா, டிஐஜியாக அஸ்வின் எம்.கோட்னீஸ் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் தற்போது மத்திய அரசுப் பணியில் உள்ளனர். மேலும், சிலர் மத்திய அரசுப் பணிக்கு செல்ல விண்ணப்பித்துள்ளனர்.

இதுகுறித்து, மத்திய அரசுப் பணிக்கு செல்ல விருப்பம் தெரி வித்துள்ள டிஐஜி அந்தஸ்தில் உள்ள ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘‘நேர்மையான முறையில் சேவை செய்ய பல இடையூறுகள் உள்ளன. மேலும், மத்திய அரசுப் பணிக்கு சென்றால் தொடர்பு எல்லைகளை விரிவுபடுத்திக் கொள்ள முடியும், சலுகைகளும் அதிகம். எனவே, மத்திய அரசுப் பணிக்கு செல்ல விரும்பினேன்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x