

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் இடி யுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்க ளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொருத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.
நீலகிரியில் அதிக மழை
நேற்று காலை 8.30 மணிக்கு எடுக்கப்பட்ட மழை அளவின் படி சின்ன கல்லாறு, வால்பாறை, நீலகிரியில் தலா 5 செமீ, குளித் தலையில் 2 செமீ, பொள்ளாச்சி, தக்களை, பெரியாறு, மயிலாடியில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.
நேற்று மாலை 5.30 மணிக்கு எடுக்கப்பட்ட வெயில் அளவின்படி, அதிகபட்சமாக மதுரையில் மட்டும் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.