

தொழிலாளர்களுக்கான வீட்டு வசதித் திட்டம் தீவிரமாக அமல் படுத்தப்படும் என்று மத்திய வருங்கால வைப்புநிதி ஆணையர் வி.பி.ராய் தெரிவித்தார்.
கோவையில் செய்தியாளர்களி டம் அவர் நேற்று கூறியதாவது: தொழில் நிறுவனங்களில் 10-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இணைந்து வீட்டு வசதி சங்கத்தை உருவாக்கினால், அவர்களது பிஎஃப் தொகை மற்றும் வங்கிக் கடனுதவி மூலம் வீடு கட்டுவதற்கு உதவி செய்யப்படும். நாடு முழுவதும் இந்தத் திட்டம் தீவிர மாக அமல்படுத்தப்படும்.
60 முதல் 70 சதவீத தொழி லாளர்கள், ஒரு நிறுவனத்தில் இருந்து விலகும்போது, பி.எஃப். கணக்கை முடித்து, அந்த தொகையை பெற்றுக்கொள்கின்ற னர்.
இதனால், அவர்களுக்கு கிடைக்கக் கூடிய நன்மைகள் குறைவு. பிஎஃப் கணக்கை முடித் துக்கொள்ளாமல், தொடர்வது குறித்து தொழி லாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம் என்றார்.