

தமிழகத்தில் 6 நாட்களாக நடை பெற்று வந்த முழு அடைப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து, இன்று (6-ம் தேதி) அனைத்து பட்டாசு ஆலைகளும் வழக்கம் போல் இயங்கும் என பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு பட் டாசு மற்றும் கேப்வெடி உற் பத்தியாளர் சங்கத் தலைவர் ஆசைத்தம்பி சிவகாசியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறி யது: கடந்த 30-ம் தேதி முதல் தொடர்ந்து 6 நாட்களாக நடந்து வந்த பட்டாசு ஆலைகளின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக நேற்று, தமிழக அமைச்சர்கள் கே.டி.ராஜேந் திரபாலாஜி, ஜெயக்குமார் ஆகி யோரை சந்தித்துப் பேசினோம். அப்போது, பட்டாசுத் தொழில் எதிர்நோக்கியுள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து விரிவாக எடுத் துரைத்தோம். பட்டாசுக்கான வரியை 28-ல் இருந்து, 12 சதவீத மாக குறைக்கக் கோரினோம்.
எங்கள் குறைகளைக் கேட் டறிந்த அமைச்சர்கள், ‘அடுத்த தாக ஆக.5-ம் தேதி நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பட்டாசு தொழிலின் சிரமங்களை எடுத்துக்கூறி, கண்டிப்பாக பட்டாசுக்கான வரி விதிப்பை 28-ல் இருந்து 12 சதவீதமாக குறைக்க நடவடிக்கை எடுப்பதாகவும், தமிழக அரசு பட்டாசுத் தொழி லுக்கு உறுதுணையாக இருக் கும்’ எனவும் வாக்குறுதி அளித்துள்ளனர்.
வணிக வரிச் செயலர் சந்திர மவுலியும் பட்டாசுத் தொழிலுக்கு ஆதரவாக, அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பேசுவதாக வாக்குறுதி அளித்துள்ளார். அதன் அடிப்படையில் நாங்கள் எங் களது வேலைநிறுத்தத்தை நிறுத் திக் கொண்டு இன்று (6-ம் தேதி) முதல் பணிகளைத் தொடங்க முடிவு செய்துள்ளோம் என்றார்.
தீப்பெட்டி உற்பத்தி நிறுத்தம்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 566 தீப்பெட்டி ஆலைகள் இயங்கி வருகின்றன. இத்தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள் பணி புரிகின்றனர்.
முழுவதும் கைகளால் தயாரிக் கப்படும் தீப்பெட்டி உற்பத்திக்கு வரி விதிப்பு இல்லை. ஒரு பகுதி மட்டும் இயந்திரங் களால் மேற்கொள்ளப்படும் உற்பத்திக்கு 6 சதவீதம் வரியும், முழுமையாக இயந்திரங்களால் செய்யப்படும் உற்பத்திக்கு 12 சதவீதம் வரியும், 5.5 சதவீதம் வாட் வரியும் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜிஎஸ்டியில் கைகளால் உற்பத்தி செய்யப் படும் தீப்பெட்டி ஆலைகளுக்கு 6 சதவீத வரியும், பகுதியாக மற்றும் முழுவதுமாக இயந்திரங் களால் உற்பத்தி மேற்கொள்ளும் ஆலைகளுக்கு ஒரே மாதிரி யாக 18 சதவீத வரியும் விதிக்கப்பட்டுள்ளது.
இதைக் கண்டித்து விருதுநகர் மாவட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி ஆலைகள் கடந்த 1-ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. சாத்தூரில் நேற்று தீப்பெட்டி ஆலை உரிமையாளர்கள், தொழி லாளர்கள் மற்றும் உப தொழில் தொழிலாளர்கள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பேரணி நடத்தினர். கோரிக்கைகள் குறித்து வட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர்.