

காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட அனைத் துக் கட்சி கூட்டத்தை தமிழக முதல்வர் கூட்டி மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார். இதுகுறித்து ஈரோட்டில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் 80 சதவீத மக்க ளின் குடிநீர் ஆதாரமாக உள்ள காவிரியில் நாம் இழந்த உரிமையை மீட்க பா.ம.க. சார்பில் ஜூலை 28, 29, 30 ஆகிய தேதிகளில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் விழிப்புணர்வு பிரச்சார பயணம் நடக்க உள்ளது. பிரச்சார பயணம் ஒகேனக்கல்லில் தொடங்கி பூம்பு காரில் நிறைவடைகிறது. ஈரோட் டில் ஜூலை 28-ம் தேதி மாலையும், பவானியில் இரவும் பொதுக்கூட்டம் நடைபெறும்.
காவிரி பிரச்சினையில் தமிழக உரிமையை நிலைநாட்டும் வகை யில், மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் வகையில் அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக முதல்வர் எடப் பாடி பழனிசாமி கூட்ட வேண்டும். அனைத்துக்கட்சி குழுவை டெல் லிக்கு அழைத்துச் சென்று தமிழகத் துக்கு நியாயம் கிடைக்கும் வரை அங்கேயே தங்கியிருக்க வேண்டும்.
மத்திய அரசின் ஜி.எஸ்.டி. முறையில் இதுவரை வரியே விதிக்கப்படாத 550 பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டுக்கு கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஜவுளி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு ஜி.எஸ்.டி வரியை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
அரசியலுக்கு யார் வேண்டு மானாலும் வரலாம். அதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. கருத்து கூறுவது அனைத்து குடிமகன்களின் கடமை. இந்த விஷயத்தில் தனது கருத்தை பதிவு செய்த கமல்ஹாசனை அமைச்சர்கள் மிரட்டும் தொனியில் விமர்சிப்பது கண்டனத்துக்குரியது.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டி யின்போது பாமக மாநில துணைப் பொதுச்செயலர் பொ.வை.ஆறுமுகம், மாநிலத் துணைத் தலைவர்கள் என்.ஆர்.வடிவேல், எஸ்.எல்.பரமசிவம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.