Published : 30 Jul 2017 11:25 AM
Last Updated : 30 Jul 2017 11:25 AM

மன்னார்குடியில் மர்மமான முறையில் இளம்பெண் இறந்த வழக்கு கொலை வழக்காக மாற்றம்: எஸ்எஸ்ஐயுடன் சேர்ந்து மாமனாரே கொன்றது தெரியவந்தது

மன்னார்குடியில் இளம்பெண் மர்ம மான முறையில் உயிரிழந்த வழக் கில், வரதட்சணைக்காக மாமனாரே, உறவினருடன் சேர்ந்து கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் இளம்பெண் திவ்யா(24) கடந்த 17-ம் தேதி மர்மமான முறை யில் உயிரிழந்த வழக்கில் அவரது கணவர் டாக்டர் இளஞ்சேரன், மாமனார் முத்தழகன், மாமியார் ராணி ஆகியோர் கடந்த 18-ம் தேதி கைது செய்யப்பட்டனர்.

மன்னார்குடி நீதிமன்ற உத் தரவுப்படி அவர்கள் 3 பேரையும் கடந்த 27-ம் தேதி முதல் நேற்று வரை போலீஸ் காவலில் எடுத்து டிஎஸ்பி அசோகன் தலைமை யிலான போலீஸார் விசாரணை நடத் தினர். இதில், திவ்யாவை வரதட் சணைக்காக மாமனாரே கொலை செய்தது தெரியவந்துள்ளது.

கடந்த 17-ம் தேதி முத்தழகன், ராணியின் அண்ணன் சிவக்குமார், கரூரைச் சேர்ந்த செந்தில் ஆகியோர் வீட்டிலிருந்த திவ்யாவை அடித்தும், முகத்தில் தலையணையால் அழுத் தியும் கொலை செய்ததாக விசா ரணையில் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கொலையின்போது, திவ்யாவின் 2 வயது மகனை, முத்தழகன் தனது காரில் பூட்டி வைத்துள்ளார். மேலும், கொலை நடந்தபோது வெளியே சென்றிருந்த ராணி, பிறகு வந்து கொலைக்கான தடயங்களை அழித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று மதியம் போலீஸ் விசாரணை முடிந்து முத்தழகன், ராணி, இளஞ்சேரன் ஆகிய மூவரையும் மன்னார்குடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் னிலையில் போலீஸார் ஆஜர்படுத்தி, மீண்டும் திருச்சி மத்தியச் சிறைக்கு அழைத்துச் சென்றனர். இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முத்தழக னின் காரும் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது.

இந்தக் கொலையில் தொடர்பு டைய சிவக்குமார், திருவாரூர் உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவில் எஸ்எஸ்ஐ-யாக உள்ளார். அவரை யும், செந்திலையும் பிடிக்க போலீ ஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

திவ்யாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவர் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டாரா என்பது தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x