

மழைக்காலத்தை முன்னிட்டு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கவில்லை என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
பால் விலை உயர்வு, உத்தேச மின்கட்டண உயர்வு ஆகியவற்றை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், வடசென்னையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
பால் விலை உயர்வு, மின் கட்டணம் உயர்வு, விவசாயிக ளுக்கு நிவாரணம் வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. திமுக ஆட்சியில் ரூ.17.65 ஆக இருந்த ஒரு லிட்டர் பால் விலை ரூ.34 உயர்ந்துள்ளது. இதே போல், மின்கட்டணம் உயர்த்தப் படவுள்ளது.
தற்போது சர்க்கரை விலையும் ரூ.3 உயர்த்தப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் திமுக ஆட்சியில் முன்னெச்சரிக்கை ஏற்பாடு செய்யப்பட்டன. ஆனால், இப்போதுள்ள அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. கன மழையினால் 13 லட்சம் ஏக்கர் நிலம் பாதிக்கப்பட்டுள்ளதாக வேளாண் மைத்துறை முதல்கட்ட அறிக்கை யில் தெரிவித்துள்ளது. இதெற்கெல்லாம் இப்போதுள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளிப்பாரா? கிரானைட் ஊழல் தொடர்பாக சகாயம் தலை மையிலான குழுவுக்கு விசாரணை அனுமதிக்காத நிலையில், உயர் நீதிமன்றம் அபாரதம் விதித் துள்ளது. எனவே, தமிழகத்தில் விரைவில் மாற்றம் ஏற்பட உறுதி ஏற்போம்’’ என்றார்.
இதில், அமைப்பு செயலாளர் சற்குண பாண்டியன், திருச்சி சிவா எம்.பி உள்பட ஆயிரக்கணக்கான தொண்டர்களும், நிர்வாகிகளும், மகளிரணியினரும் பங்கேற்றனர்.