Published : 29 Jul 2017 09:55 AM
Last Updated : 29 Jul 2017 09:55 AM

4 இடங்களில் சுங்கச்சாவடி அமைப்பு:நெமிலிச்சேரி மீஞ்சூர் இடையே வெளிவட்ட சாலை விரைவில் திறப்பு

நெமிலிச்சேரி முதல் மீஞ்சூர் வரை யிலான வெளிவட்ட சாலை அமைக் கும் பணிகள் 95 சதவீதம் நிறை வடைந்துள்ளன.

அடுத்த 6 மாதங் களில் மக்களின் பயன்பாட்டுக்கு இந்தச் சாலை திறக்கப்படும் என தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தற்போது மொத்தம் சுமார் 2 கோடியே 50 லட்சம் வாகனங்கள் இருக்கின்றன. இது 2020-ல், 5 கோடியே 61 லட்சத்து 43 ஆயி ரத்து 622 ஆக உயரும் என மதிப் பிடப்பட்டுள்ளது. இதனால், சென்னை போன்ற மாநகரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற் படுகிறது. எனவே, போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சாலை விரிவாக்கம், மேம்பாலம் அமைப் பது போன்ற திட்டங்கள் அவசிய மாக இருக்கின்றன. சென்னை புறநகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நெமிலிச்சேரி முதல் மீஞ்சூர் வரை ரூ.1,075 கோடியில் வெளிவட்ட சாலை அமைக்க தமிழக அரசு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தது.

அதன்படி, பொது மற்றும் தனியார் பங்கேற்போடு இத்திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. தற்போது, 95 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. இதுதொடர்பாக தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன அதி காரிகளிடம் கேட்டபோது, அவர் கள் கூறியதாவது: சென்னை மற் றும் புறநகர் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வெளிவட்ட சாலை திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின் றன. முதல்கட்ட திட்டத்தின்படி, வண்டலூர் நெமிலிச்சேரி சாலை அமைக்கும் பணிகள் முடிக்கப் பட்டு, கடந்த 2009-ம் ஆண்டு திறக்கப்பட்டது. அடுத்த கட்டமாக நெமிலிச் சேரியில் இருந்து திருவொற்றியூர், பொன்னேரி, பஞ்சட்டி வழியாக மீஞ்சூர் வரையில் ரூ.1,075 கோடி செலவில் 30.3 கி.மீ. தூரத்துக்கு 6 வழிச் சாலைகள் அமைக்கும் பணிகள் கடந்த 4 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கின்றன. 4 இடங்களில் சுங்கச்சாவடிகளும் அமைக்கப்படுகின்றன. தற்போது, 95 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதால், அடுத்த 6 மாதங்களில் இந்தச் சாலை மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்படும். இதனால், சென்னை மாநகருக்கு பல்வேறு திசைகளில் இருந்து வரும் கனரக, சரக்கு வாகனங்கள் சென்னை மாநகருக்குள் நுழையாமல் எண்ணூர், துறைமுகம், புறநகர் தொழிற்சாலைகளுக்கு எளிதாகச் சென்றடைய முடியும். இதன்மூலம் சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர். 95 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதால், அடுத்த 6 மாதங்களில் இந்தச் சாலை மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x