உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டைப் பெற நடவடிக்கை: மருத்துவக் கல்வி இயக்குநர் தகவல்

உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டைப் பெற நடவடிக்கை: மருத்துவக் கல்வி இயக்குநர் தகவல்
Updated on
2 min read

உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு களில் தமிழக அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு பெற நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவக்கல்வி இயக்கு நர் (டிஎம்இ) எட்வின் ஜோ தெரிவித்தார்.

நாடுமுழுவதும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கு (Dm, Mch) 1,215 இடங்கள் உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 192 இடங்கள் இருக்கின்றன. தமிழகத் தில் உள்ள இடங்கள் தமிழக மாண வர்களைக் கொண்டே நிரப்பப் பட்டு வந்தது. கடந்த ஆண்டு மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் சேரலாம் என்ற நிலைஉருவானது. ஆனாலும் அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப் பட்டது. இந்த ஆண்டும் அதே முறையில் நீட்-எஸ்எஸ் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாண வர் சேர்க்கை நடத்திட திட்ட மிட்டிருந்த நிலையில், ‘மாநில அரசு கள் இந்த கலந்தாய்வை நடத்த முடியாது. மருத்துவச் சேவைகள் தலைமை இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) மாணவர் சேர்க்கைக் கான கலந்தாய்வு நடத்தும்’ என்று மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்பால் தமிழகத்தில் எம்டி, எம்எஸ் படித்து முடித்தவர்களுக்கு உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் சேர இடம் கிடைக்குமா என்ற நிலைஏற்பட்டுள்ளது.

மத்திய அரசிடம் பறிபோனது

இது தொடர்பாக அரசு மருத்து வர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் அமைப்புச் செயலாளர் ஏ.ராம லிங்கம், சென்னை மாவட்டத் தலைவர் க.இளஞ்சேரலாதன் கூறியதாவது:

உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வை மாநில அரசுகள் நடத்தக்கூடாது என்று திடீரென்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நாம் போராடிப் பெற்ற 192 இடங்கள் மத்திய அரசிடம் பறிபோகிறது. மருத் துவம் இளநிலை மற்றும் முது நிலை படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் கலந் தாய்வை அந்தந்த மாநில அரசு கள்தான் நடத்துகின்றன. உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக் கும் நீட் தேர்வு நடத்தப்பட்டது. மாநிலஅரசுகள்தான் கலந்தாய்வு நடத்த வேண்டும். இதில் மட்டும் எப்படி மத்தியஅரசு கலந்தாய்வு நடத்த முடியும். தமிழகத்தின் உரிமையை மீட்கவும், அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை காக்கவும் தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரி வித்தனர்.

தமிழக அரசு நடவடிக்கை

இதுபற்றி மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) எட்வின் ஜோவிடம் கேட்டபோது, “உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக் கான கலந்தாய்வை மத்திய அரசு நடத்துகிறது. தமிழகத்தில் உள்ள 192 இடங்களில் 50 சதவீத இடத்தை மட்டும் மத்திய அரசுக்கு கொடுத்துவிட்டு, மீதமுள்ள 50 சத வீத இடத்தை தமிழக அரசு டாக்டர்களுக்கு கிடைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

தேர்வு முடிவுகள்

உயர்சிறப்பு மருத்துவப் படிப்பு களுக்கான நீட்-எஸ்எஸ் தேர்வு கடந்த மாதம் 10 மற்றும் 11-ம் தேதிகளில் நாடுமுழுவதும் நடை பெற்றது. தேர்வு முடிவுகள்வரும் 15-ம் தேதி வெளியிடப்படுகிறது. அதன்பின்னர் கலந்தாய்வு தொடங்க உள்ளது.

இடங்கள் விவரம்

தமிழகம்-192, மகாராஷ் டிரா-172, உத்தரப்பிரதேசம்-141, மேற்கு வங்கம்-141, கேரளா-129, தெலங்கானா-126, கர்நாடகா-120, ராஜஸ்தான்-93, ஒடிசா-32, ஜம்மு- காஷ்மீர்-26, குஜராத்-22, ஹரி யானா-5, இமாச்சல பிரதேசம்-4, ஜார்க்கண்ட்-1, மத்திய பிரதேசம்-2, மணிப்பூர்-3, மேகாலயா-2. டெல்லி, ஆந்திரா, பிஹார் உள்ளிட்ட 15 மாநிலங்களில் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கு ஒரு இடம்கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in