கதிராமங்கலம் போராட்டத்தில் கைதான 8 பேர் ஜாமீன் கோரி மேல்முறையீடு: தீர்ப்பை ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்

கதிராமங்கலம் போராட்டத்தில் கைதான 8 பேர் ஜாமீன் கோரி மேல்முறையீடு: தீர்ப்பை ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்
Updated on
1 min read

கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராக நடை பெற்ற போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட 8 பேரின் ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பு, உயர் நீதிமன்ற கிளையில் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராக கடந்த 30-ம் தேதி நடைபெற்ற போராட் டத்தின்போது கலவரம் வெடித் தது. இதுதொடர்பாக மயிலாடு துறை பேராசிரியர் ஜெயராமன், கதிராமங்கலத்தைச் சேர்ந்த முருகன், சாமிநாதன், சிலம் பரசன், செந்தில்குமார், வெங்கட் ராமன், திருமந்துரையைச் சேர்ந்த சந்தோஷ், கும்பகோணம் விடுதலை சுடர் ஆகிய 8 பேர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேல்முறையீடு மனு

இவர்களது ஜாமீன் மனுக்கள் தஞ்சாவூர் நீதி மன்றத்தில் தள்ளுபடி செய் யப்பட்டன. இந்நிலையில் கைதானவர்களில் 8 பேர் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நீதிபதி பஷீர்அகமது முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

ஓஎன்ஜிசி ஆட்சேபம்

அப்போது இவர்களுக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து ஓஎன்ஜிசி சார் பில் மனு தாக்கல் செய்யப் பட்டது.

‘எண்ணெய் நிறுவனத் துக்கு எதிராக சட்டப்பூர்வ மாக போராட பல்வேறு வழி கள் உள்ள நிலையில், மனு தாரர்கள் வன்முறையில் இறங்கியுள்ளனர். இதனால் அவர்களுக்கு ஜாமீன் வழங் கக்கூடாது’ என்று ஓஎன்ஜிசி நிறுவன வழக்கறிஞர் வாதிட் டார். அரசு வழக்கறிஞரும் மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரி வித்தார்.

இதையடுத்து ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நீதி பதி பஷீர்அகமது தேதி குறிப் பிடாமல் ஒத்திவைத்து உத்தர விட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in