சென்னை ஸ்மார்ட் சிட்டி இலச்சினை விரைவில் தேர்வு: மாநகராட்சி ஆணையர் தகவல்

சென்னை ஸ்மார்ட் சிட்டி இலச்சினை விரைவில் தேர்வு: மாநகராட்சி ஆணையர் தகவல்
Updated on
1 min read

சென்னை ஸ்மார்ட் சிட்டி நிறுவனத்துக்கான இலச்சினை விரைவில் தேர்வு செய்யப்பட இருப்பதாக மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை சார்பில் இந்தியாவில் 100-க்கும் மேற் பட்ட நகரங்கள் ஸ்மார்ட் நகரங் களாக மாற்றுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்தப் பட்டியலில் சென்னை மாநக ரமும் இடம்பெற்றுள்ளது.

கம்பெனி சட்டத்தின் கீழ்

சென்னை மாநகரை ஸ்மார்ட் நகரமாக மாற்றும் திட்டத்துக்கான கருத்துரு ரூ.1,366 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்காக சென்னை ஸ்மார்ட் சிட்டி நிறுவனம் தொடங்கப்பட்டு, கம்பெனி சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் தலைவராக சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளார்.

இந்நிறுவனத்துக்கான 7 இலட்சினைகள் ஏற்கெனவே உருவாக்கப்பட்டன. மேலும் பொதுமக்களும் ஸ்மார்ட் சிட்டி நிறுவனத்துக்கான இலட்சினையை உருவாக்கி, பதிவேற் றவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அந்த இலச்சினைகளுக்கு பொதுமக்களே வாக்களிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டது. இப்பணி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதனால், விரைவில் சென்னை ஸ்மார்ட் சிட்டி நிறுவனத்துக்கான இலச்சினை வெளியிடப்பட உள்ளது.

நிர்வாகிகள் கூட்டம்

மாநகராட்சி ஆணையர் தா.கார்த்தி கேயன் கூறியபோது, ‘‘பொதுமக்களிடம் இருந்து 50-க்கும் மேற்பட்ட இலச்சினை கள் இணையத்தில் பதிவேற் றம் செய்யப்பட்டன. ஏற் கெனவே நாங்களும் சில இலட்சினைகளை உருவாக்கி இருந்தோம்.

இதற்கு பொதுமக்களும் வாக்களித்துள்ளனர். இதில் 3 இலச்சினைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் ஒன்று, விரைவில் நடைபெற உள்ள ஸ்மார்ட் சிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் தேர்வு செய்யப்படும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in