மின்சாரத்தை எப்படி சேமிக்கலாம்? - பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மின்வாரிய ஊழியர்

மின்சாரத்தை எப்படி சேமிக்கலாம்? - பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மின்வாரிய ஊழியர்
Updated on
2 min read

மின்சாரத்தை எப்படி, எந்தெந்த வழிகளை பின்பற்றி சேமிக்கலாம் என்பது குறித்து மின்வாரிய ஊழியர் ஒருவர், சமூக அக்கறையுடன் தன்னார்வமாக பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

மதுரை வண்டியூரைச் சேர்ந் தவர் ச. சர்க்கரை சசாங்கன். இவர் அண்ணா நகர், சிறப்பு நிலை முகவராக (போர்மேன்) பணிபுரிந்து வருகிறார். தமிழ்நாடு மின்வாரிய ஜனதா தொழிலாளர் சங்க மண்டலத் தலைவராகவும் இருக்கிறார்.

இவர், அரசு ஊழியராக பணிபுரிவதோடு தனது கடமை முடிந்துவிட்டதாக நினைக்காமல் தினமும் வேலைப் பளுவுக்கு இடையில் கிடைக்கும் நேரத்தில் மின்சாரத்தை எப்படி, எந்தெந்த வழிகளில் சேமிக்கலாம் என்பது பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

சில நேரங்களில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்தும், தினமும் மின்பழுது பார்க்கச் செல்லும் இடங்களில் சந்திக்கும் பொதுமக்களிடம் மின் சிக்கன விழிப்புணர்வு பணியை மேற் கொண்டுள்ளார்.இதுகுறித்து சசாங்கன் கூறியதாவது: ஒவ்வொரு மின்சாதனத்தையும் அவற்றை பயன்படுத்துவதைப் பொறுத்து மின்சாரத்தை சேமிக்கலாம். ஆனால், இந்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் இல்லை. தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லை. ஆனால், மின்சார பில் வந்ததும், எப்படி வந்தது என ஆராய்ச்சி செய்கின்றனர். மின்சா ரத்தை சேமிப்பது, சிக்கனமாகப் பயன்படுத்துவதும், மின்சார கட்டணத்தை குறைப்பதும் நமது கையில்தான் இருக்கிறது.

அதனால், என்னால் முடிந்தளவு சந்திக்கும் நபர்களிடம், நண்ப ர்களிடம் மின் சிக்கன முறைகளை விளக்கி வருகிறேன். எந்தச் சூழலிலும் குண்டு பல்புகளை பயன்படுத்தவே கூடாது. 40 வாட்ஸ் குழல் விளக்குக்கு (டியூப் லைட்) பதில் 9 வாட்ஸ் எல்இடி பல்புகளை பயன்படுத்தினால் 60 சதவீதம் மின்சாரத்தைச் சேமிக்கலாம். டியூப்லைட் பயன்படுத்த வேண் டிய கட்டாயம் ஏற்பட்டால், அதில் எலக்ட்ரானிக் சோக்குகளை பயன்படுத்தினால் 20 சதவீதம் மின்சாரத்தை சேமிக்கலாம்.

வீடு கட்டும் போதே பெரிய ஜன்னல்களை வைத்து கட்டினால் காற்றும், வெளிச்சமும் கிடைக்கும். அதனால், மின்சார பல்பு, மின்விசிறி பயன்பாடு குறையும்.

பகலில் சூரிய வெளிச்சம் இருக்கும்போது விளக்குகளை தவிர்க்க வேண்டும். மின் விசிறி, விளக்குகளை தேவையானபோது மட்டுமே பயன்படுத்தும் பழக்க த்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். விளக்குகள் மற்றும் மின்விசிறிகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். மின்விசிறிகளுக்கு எலக்ட்ரானிக் ரெகுலேட்டர் பயன்படுத்தினால் 15 சதவீதம் மின்சாரத்தை சேமிக்கலாம். துணிகளை தினமும் அயர்ன் செய்யாமல், மொத்தமாக அயர்ன் செய்ய வேண்டும். துணிகளை துவைக்கும் இயந்திரத்தில் (வாஷிங் மெஷின்) உலர வைப்பதை தவிர்த்து, சூரிய ஒளியில் உலர வைக்கவும்.

மின்சக்தி சேமிப்பான்களை (எனர்ஜி சேவர்) ப்ரீட்ஜ், ஏ.சி.களில் கண்டிப்பாக பயன்படுத்தவும். ப்ரிட்ஜ்-ஐ அடிக்கடி திறப்பதை தவிர்க்கவும். ப்ரிட்ஜை சுற்றி காற்றோட்டமாக வைத்திருக்கவும். எலெக்ட்ரிக் அடுப்புகள் பயன் படுத்துவதை தவிர்க்கவும். வயரிங் செய்யும்போது ஐஎஸ்ஐ தரம் கொண்ட பொருள்களை பயன்ப டுத்தவும். சர்க்கியூட் பிரேக்கர் மற்றும் எர்த் லீக்கேஜ் சர்க்கியூட் பிரேக்கர்களை பொருத்தவும். ஏசியை தேவையான போது மட்டுமே பயன்படுத்தவும். ஏசி மற்றும் இதர மின்சாதனங்களை வாங்கும்போது நட்சத்திரக் குறியீடு அடிப்படையில் வாங்கவும். வாஷிங் மெஷின் மற்றும் கிரைண்டர்களை அதன் முழு திறனுக்கு பயன் படுத்தவும். டிவி, ஏசி, டிவிடி போன்ற ரிமோட் கொண்டு பயன்படுத்தும் சாதனங்களை பயன்படுத்தாதபோது ஸ்விட்ச் ஆப் செய்யவும்.

மின் தூக்கிகளை (லிப்ட்) அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்கவும். இந்த முறைகளை கடைப்பிடித்தால் வீடுகளில் மின்சாரத்தை சேமிக்கலாம். மின்கட்டணத்தையும் கணிசமாகக் குறைக்கலாம்.

அதன் மூலம் நாட்டின் வளர்ச்சி க்கும், மின்சார பற்றாக்குறையை தீர்க்க நாமும் ஒரு கருவியாக இருக்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in