

சென்னை மாநகரப் போக்கு வரத்துக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, தகுதியுடையவர்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் பரிந்துரை செய்துள்ளது என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சென்னை மாநகரப் போக்கு வரத்துக் கழகத்தில் ஜூனியர் ட்ரேட்ஸ்மேன், இளநிலை பொறி யாளர்(பயிற்சி), ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியுடைய பதிவுதாரர் களை திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் பரிந்துரை செய்துள்ளது.
இதில், ஜூனியர் டிரேட்ஸ்மேன் பணியிடங்களுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் என்.டி.சி., அல்லது என்.ஏ. சி., கல்வி தகுதியிருக்க வேண்டும். மேலும், 1.07.2014 அன்று, எஸ்.சி., மற்றும் எஸ்.டி., வகுப்பினர் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். பி.சி., மற்றும் எம்.பி.சி., வகுப்பினர் 35 வயதுக்குள்ளும், இதர வகுப்பினர் 30 வயதுக் குள்ளும் இருக்கவேண்டும்.
ஓட்டுநர் பணியிடங்களுக்கு, 8-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், 1.07.2014 அன்று, எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பி.சி., மற்றும் எம்.பி.சி., வகுப்பினர் 45 வயதுக்குள்ளும், இதர வகுப்பினர் 40 வயதுக் குள்ளும் இருக்கவேண்டும்.
நடத்துநர் பணியிடங்களுக்கு, 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் நடத் துநர் உரிமம் பெற்றிருக்கவேண் டும். மேலும், 1.07.2014 அன்று எஸ்.சி., மற்றும் எஸ்.டி., வகுப்பினர் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். பி.சி., மற்றும் எம்.பி.சி., வகுப்பினர் 35 வயதுக்குள்ளும், இதர வகுப்பினர் 30 வயதுக்குள்ளும் இருக்கவேண்டும்
அதேபோல், இளநிலை பொறி யாளர்(பயிற்சி) பணியிடங்களுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் மெக்கானிக்கல் அல்லது ஆட்டோ மொபைல் பொறியியல் பட்டயப் படிப்பு மற்றும் அப்ரண்டிஸ் முடித் திருக்க வேண்டும். 01.07.2014 அன்று, எஸ்.சி., மற்றும் எஸ்.டி., வகுப்பினர் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். பி.சி., மற்றும் எம்.பி.சி., வகுப்பினர் 35 வயதுக் குள்ளும், இதர வகுப்பினர் 30 வய துக்குள்ளும் இருக்கவேண்டும்.
சென்னை மாநகரப் போக்கு வரத்துக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, சாதி சுழற்சி வாரியாக, பதிவு மூப்பின் அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்கள் மற்றும் பதிவு மூப்பு விவரங்கள் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளன.
அதனை பதிவுதாரர்கள் பார்வையிட்டு, விடுபாடுகள் இருப்பின் உரிய ஆதாரங்களுடன் நாளைக்குள்(25-ம் தேதி) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளவேண்டும் என, மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.