

பருப்பு கொள்முதலில் முறைகேடு நடந்துள்ளதாக உண்மையில்லாத தகவல்களை அறிக்கையாக வெளியிட்டதால், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மீது மான நஷ்ட வழக்குத் தொடரப்படும் என்று, தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார்.
அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை வருமாறு:
பாமக நிறுவனர் ராமதாஸ் சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு ஆகியவற்றை கொள்முதல் செய்வதில், குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகக் கூறி, இந்த குற்றச்சாட்டுகள் உண்மை என்றால், கடந்த மூன்றரை ஆண்டுகளில் மூவாயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பு ஏற்பட்டிருக்கக் கூடும் என்று கூறியுள்ளார்.
யூகங்களின் அடிப்படையில், அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக் கக்கூடும் என உண்மையில்லாத வற்றை, ஒரு அரசியல் கட்சி நிறுவனர், அறிக்கை வெளியிட்டு அரசுக்கு மக்கள் மத்தியில் களங்கம் ஏற்படுத்த முயல்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
குற்றச்சாட்டுகளில் உண்மை யிருந்தால் என்று தெரிவித்திருக் கிறதோடு அல்லாமல், உறுதியா கக் குற்றம்சாட்டி எதையும் தெரி விக்கவில்லை. இவ்வாறு கூறுவ தால், மான நஷ்ட வழக்கு தொடுக்கப்படுவதிலிருந்து தப்பித் துக் கொள்ளலாம் என நினைத்துக் கொண்டு, மக்களைக் குழப்பும் விதமாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கை அரசியல் உள்நோக்கத்துடன், அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதால், அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடுக்கப் படும்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் வெளிப்படையாக ஒப்பந்தப் புள்ளிகள் இறுதி செய்யப்படுவ தால், எந்தவித முறைகேடுகளும் நடப்பதற்கு வாய்ப்பில்லை.
இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று, உயர்நீதிமன்றமே அவ்வப்போது உத்தரவு பிறப்பித்துள்ள நிலை யில், ராமதாஸ் முறைகேடு இருக்குமோ என்று சொல்வது, உயர்நீதிமன்றத்தையே அவமதிப் பது ஆகும்.
பருப்பு கொள்முதலில் கடந்த மூன்றரை ஆண்டுகளில், அரசுக்கு மூவாயிரம் கோடிக்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் எனக் கூறியுள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு, அதிமுக அரசு பொறுப்பேற்ற முதல், இதுவரை, 4,450 கோடி ரூபாய்க்கு துவரம் பருப்பு, கனடா மஞ்சள் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு ஆகியவற்றை கொள்முதல் செய்துள்ளது.
இதில், மூன்றாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இழப்பு என்றால், சராசரியாக துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு ஆகியவை கிலோ ஒன்றுக்கு 17 ரூபாய் என்ற அளவில் கொள் முதலுக்கு கிடைக்கும் என்ப தாகும். இது சாத்தியமானதா என்பதை ராமதாஸ் தான் விளக்க வேண்டும்.
இந்திய தேசிய வேளாண் கூட்டுறவுக் கூட்டமைப்பு நிறு வனம் உளுத்தம் பருப்பை டன் 43 ஆயிரம் ரூபாய் என்ற விலையிலும், மைசூர் பருப்பை 29 ஆயிரம் ரூபாய் என்ற விலை யிலும் கொள்முதல் செய்கிறது என ராமதாஸ் தெரிவித்துள்ளது உண்மைக்கு மாறானதாகும்.
கற்பனைகளின் அடிப்படை யில், பொய்யான புகார்களைத் தெரிவித்து, அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடலாம் என்று நினைப் பதை ராமதாஸ் நிறுத்திக்கொள்ள வேண்டும்.