Published : 03 Jul 2017 08:05 AM
Last Updated : 03 Jul 2017 08:05 AM

மருத்துவரைக் கொன்றது ஏன்? - கைது செய்யப்பட்ட உறவினர் போலீஸில் பரபரப்பு வாக்குமூலம்

திருணம் நடைபெற இருந்த நிலையில் பூம்புகார் நகரைச் சேர்ந்த மருத்துவர் கொலையான சம்பவத்தில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொளத்தூர் பூம்புகார் நகரைச் சேர்ந்தவர் மருத்துவர் ராஜேஷ் குமார் (26). இவருக்கு இன்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், கடந்த 30-ம் தேதி வீட்டின் முன் பகுதியில் உள்ள நீர் தேக்கத் தொட்டியில் சடலமாகக் கிடந்தார்.

இதுகுறித்து கொளத்தூர் போலீஸார் வழக்கு பதிந்து, கொலையாளியை பிடிக்க 3 தனிப்படைகளை அமைத்து தேடி வந்தனர். விசாரணையில் ராஜேஷ் குமாரின் பெரியப்பா மகன் மகேந்திரன் இந்தக் கொலை செய்தது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் நேற்று கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் போலீஸாரிடம் மகேந்திரன் தெரிவித்ததாக கூறப்படுவதாவது:

எனது சித்தப்பா மகன்தான் ராஜேஷ் குமார். அண்ணா நகரில் எனது தந்தை நடத்தி வரும் மருந்து கடை மூலம் ராஜேஷ் குமாரின் தந்தை வங்கி மூலம் ரூ.35 லட்சம் கடன் பெற்றார். ஆனால், அதற்கு வட்டி கட்டவில்லை. இதனால், எனது தந்தைதான் வட்டி கட்டினார். மேலும், எனது மனைவி பற்றி ராஜேஷ் குமார் அவதூறு பரப்பி வந்தார். இதனால், எனக்கும் ராஜேஷ் குமார் குடும்பத்துக்கும் பகை ஏற்பட்டது. ஆனால், அதை வெளிக்காட்டாமல் பழகி வந்தேன்.

இந்நிலையில், ராஜேஷ் குமாருக்கு திருமண ஏற்பாடு நடந்தது. இதையொட்டி அவரிடம் திருமண பார்ட்டி வைக்கும்படி கூறினேன். இதைத் தொடர்ந்து கொலை நடந்த அன்று வீட்டில் வைத்தே மது விருந்து வைத்தார். அப்போது, எங்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த நான் ராஜேஷ் குமார் மீது தாக்குதல் நடத்தினேன். இதில், அவர் சம்பவ இடத்தியே உயிர் இழந்தார். கொலையை மறைப்பதற்காக தண்ணீர் தொட்டிக்குள் சடலத்தை வீசினேன் என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x