ஜிஎஸ்டி வரி அமல்படுத்தியதன் எதிரொலி: விலை உயர்வால் பொதுமக்கள் தவிப்பு

ஜிஎஸ்டி வரி அமல்படுத்தியதன் எதிரொலி: விலை உயர்வால் பொதுமக்கள் தவிப்பு
Updated on
2 min read

ஜிஎஸ்டி அமலுக்கு வந்ததை தொடர்ந்து பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் நேற்று முதல் ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்பட்டுள் ளது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டால் விலைவாசி குறையும் என அரசியல்வாதிகள் அறிவித்து வந்த நிலையில், நேற்றே பொருட்களின் விலை உயர்ந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அடிப்படை தேவையான உணவுப் பொருட்களின் விலை உயர்ந்திருப்பது பொதுமக்களை தவிக்க வைத்துள்ளது.

ஹோட்டல்கள்

ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. மாறாக, ஒவ்வொரு பில்லிலும் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரிக்கான தொகையும் சேர்த்து வசூலிக்கப்படுகிறது. இதனால், ரூ.200 பில் கொடுக்க வேண்டிய வாடிக்கையாளர்கள் ரூ.238 கொடுத்துச் செல்கின்றனர். இதுநாள் வரை ஏசி அல்லாத உணவகங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 2 சதவீத வரியை வாடிக்கையாளர்களிடம் வசூலிக்காமல் இருந்தனர். தற்போது ஜிஎஸ்டி அமலுக்கு வந்துவிட்டதால், 12 சதவீத வரியை பில்லுடன் சேர்த்து வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கத் தொடங்கியுள்ளனர்.

ஹோட்டல்களில் உணவு பொருட்களின் விலை ரூ.5 முதல் ரூ.30 வரை உயர்ந் துள்ளது. இட்லி, தோசைக்கு ரூ.5-ம், சைவ சாப்பாடுக்கு ரூ.22-ம், பிரியாணிக்கு ரூ.20-ம் கூடுதலாக வசூலிக் கப்பட்டது.

கட்டுமான பொருட்கள்

சிமென்ட் சில்லறை விற்பனையாளர் மகேந் திரன் கூறும்போது, “ஜூன் 30-ம் தேதியுடன் சிமென்ட் உற்பத் தியாளர்கள் பில் போடுவதை நிறுத்திக் கொண்டனர். தற்போது ஜிஎஸ்டி வரிவிதிப்பைக் கணக்கிட்டு புதிய விலை நிர்ணயம் செய்கின்றனர். சிமென்ட், ஹார்டுவேர், பெயின்ட் ஆகியவற்றின் புதிய விலை வரும் 4-ம் தேதிதான் தெரியவரும்” என்றார்.

பெயின்ட் வகைகளுக்கு இது வரை புதிய ஜிஎஸ்டி பில் வராததால் விற்பனையாளர்கள் பழைய விலை யுடன் வாட் வரி 14.5 சதவீதம் சேர்த்து விற்பனை செய்கின்றனர். சிமென்ட் மொத்த விற்பனையாளர் ஆர்.கணேசன் கூறும்போது, “ஜிஎஸ்டியால் சிமென்ட் மூட்டை விலை ரூ.10 முதல் ரூ.30 வரை உயரலாம். இதேபோல அனைத்து கட்டுமான பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதால் புதிய வீடுகளின் விலை உயரும்” என்றார்.

மருந்தகங்கள்

பல மருந்தகங்களில் ஜிஎஸ்டி நடைமுறைக்கு வரவில்லை. இதுகுறித்து மருந்தகங்களில் விசாரித்த போது, ‘‘குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் அவர்களுக்கு கொடுக்க கூடிய ‘பி 125’ என்னும் மருந்து வகை முன்பு வரியுடன் அடக்க விலையாக ரூ.21.42 காசுக்கு விற்பனை செய்யப் பட்டது. தற்போதுவரை அதே விலை யில்தான் விற்பனை செய்கிறோம். அடுத்த முறை மருந்து வகைகளை கொள்முதல் செய்யும் போதுதான் மருந்துகளின் விலை குறைந்துள்ளதா? அல்லது கூடியுள்ளதா? என்பது தெரியவரும்’’ என்றனர்.

எலக்ட்ரானிக் பொருட்கள்

டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி உள்ளிட்ட சாதனங்களுக்கு முன்பு 14.5 சதவீதம் வாட் வரி விதிக்கப் பட்டிருந்ததாகவும், தற்போது அவற் றுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக் கப்பட்டுள்ளதால் விலை உயரும் என்றும் ஆனால், புதிய பில்லிங் இன்னும் வராததால் பழைய விலை யிலேயே விற்பனை செய்துவருவ தாகவும் சென்னையில் உள்ள முன்னணி வீட்டு உபயோக பொருள் விற்பனை யாளர்கள் தெரிவித்துள்ளனர்.

செல்போன் கடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் கடைகள் பலவற்றில் ஜிஎஸ்டி சாஃப்ட்வேர் கம்ப்யூட்டரில் பதி வேற்றம் செய்யும் பணி நடை பெற்று வருவதாகத் தெரி வித்துள்ளனர். கடைக்கு வருகின்ற வாடிக்கையாளர் களுக்கு பழைய வரித் திட்டத்திலேயே பில் போட்டு விட்டு, பேனாவால் கூடுதல் தொகையை பில்லில் எழுதி பலர் வசூலிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in