

சென்னை பல்கலைக்கழகத்தின் 159-வது பட்டமளிப்பு விழா வரும் 15-ம் தேதி நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் பதவி காலியாக இருந்ததால் பட்டமளிப்பு விழா நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் பல்கலைக்கழகத் தின் புதிய துணை வேந்தராக பி. துரைசாமி நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து பட்டமளிப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தொடங் கின. பட்டம் பெறும் மாணவர் களிடம் இருந்து விண்ணப்பங் களும் பெறப்பட்டன. இதனை யடுத்து வரும் 15-ம் தேதி காலை சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் பட்ட மளிப்பு விழா நடத்தப்படும் என்று பல்கலைக்கழகத்தின் சார்பில் அதிகாரப்பூர்வமாக நேற்று அறி விக்கப்பட்டது.
பட்டமளிப்பு விழாவுக்கு தமிழக ஆளுநரும் பல்கலைக் கழக வேந்தருமான வித்யாசா கர் ராவ் தலைமை வகிக்க உள் ளார்.
விழாவில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சரும் பல் கலைக்கழக இணை வேந்தரு மான கே.பி. அன்பழகன் கலந்துகொள்வார் என்று பல்கலைக் கழகம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.