Last Updated : 14 Jul, 2017 10:30 AM

 

Published : 14 Jul 2017 10:30 AM
Last Updated : 14 Jul 2017 10:30 AM

காவல் நிலையத்துக்கு வரவழைக்க கூடாது: வீட்டுக்கே நேரில் சென்று பாஸ்போர்ட் விசாரணை- போலீஸாருக்கு மண்டல அதிகாரி வலியுறுத்தல்

பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்தவர் களை காவல் நிலையத்துக்கு வரவழைக் காமல், அவர்களது வீட்டுக்கே போலீஸார் நேரில் சென்று ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் என்று மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கூறினார்.

சென்னை காவல் ஆணையர் அலுவல கத்தில் பாஸ்போர்ட் சரிபார்ப்பு (வெரிஃபி கேஷன்) பிரிவில் உளவுப்பிரிவு தலைமைக் காவலராகப் பணியாற்றும் முரு கனை, போலி பாஸ்போர்ட் வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில், பாஸ்போர்ட் பெறுவதில் உள்ள நடை முறைகள் குறித்து சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பி.கே.அசோக் பாபு, ‘தி இந்து’விடம் கூறியதாவது:

புதிதாக பாஸ்போர்ட் கோரி பெறப் படும் விண்ணப்பங்கள் அப்பகுதி காவல் துறைக்கு அனுப்பப்படும். சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர் அப்பகுதியில் வசிக்கி றாரா? அவர் மீது ஏதேனும் குற்ற வழக்கு கள் உள்ளனவா? என விசாரித்து அவர் குற்றமற்றவர் என காவல்துறையினர் அறிக்கை அளிப்பார்கள். இதன் அடிப் படையில் பாஸ்போர்ட் வழங்கப்படும். பொதுவாக, பாஸ்போர்ட் கோரி விண் ணப்பித்த 21 நாட்களுக்குள் விசாரணையை போலீஸார் முடிக்க வேண்டும். சென்னை போன்ற நகரங்களில் ஒரு வாரத்துக்குள் இந்த விசாரணை முடிந்து அறிக்கை அளிக்கப்படுவதால் ஒரு வாரம் முதல் 10 நாட்களுக்குள் விண்ணப்பதாரர்களுக்கு புதிய பாஸ்போர்ட் வழங்கப்பட்டு விடுகிறது.

முக்கிய ஆவணமான பாஸ்போர்ட்டை உரிய நபரிடம் மட்டுமே வழங்கவேண்டும் என்பதால், நேரடியாக கையில் வழங்காமல் விரைவு அஞ்சல் மூலம் அவர்களது வீட்டு முகவரிக்கு அனுப்பப்படுகிறது. இதன் மூலம், விண்ணப்பதாரர் குறிப்பிட்ட இடத்தில்தான் வசிக்கிறார் என்பதை அஞ்சல் துறையினரும் உறுதிசெய்ய முடிகிறது. போலி நபர்களிடம் பாஸ்போர்ட் செல்வது தடுக்கப்படுகிறது.

எனவே, பாஸ்போர்ட் தொடர்பான போலீஸ் விசாரணைக்கு, விண்ணப்ப தாரர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்களை காவல் நிலையத்துக்கு வரவழைப்பதற்கு பதி லாக போலீஸாரே அவர்களது வீட்டுக்கு நேரில் சென்று ஆவணங்களை சரிபார்ப் பது அவசியம்.

தபால்காரர்களும் விண்ணப்ப தாரர்களை அஞ்சல் நிலையத்துக்கு வரவழைப்பதற்கு பதிலாக, அவர்களது வீட்டு முகவரிக்கு நேரில் சென்று வழங்க வேண்டும். இதன்மூலம் முறைகேடுகளை முற்றிலுமாக தடுக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

லஞ்சம் கேட்டால் புகார் அளிக்கலாம்

பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது:

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு பாஸ்போர்ட் சரிபார்ப்புக்காக, விண்ணப்ப தாரர்கள்தான் காவல் நிலையம் செல்லவேண்டி இருந்தது. இப்போது 98 சதவீதம் அவர்களது வீட்டுக்கு போலீஸார் நேரில் சென்று, ஆவணங்களை சரி பார்க்கின்றனர். ஒன்றிரண்டு பேர் மட்டுமே விண்ணப்பதாரரை காவல் நிலை யத்துக்கு அழைத்து விசாரிக்கின்றனர். நம்பிக்கையின்பேரிலும் ஒருசிலரை காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரித்துவிட்டு அனுமதி கொடுக்கின்றனர். போலி பாஸ்போர்ட் வழக்கில் போலீஸ்காரரே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், போலீஸார் அதிக கவனத்துடன் செயல்படத் தொடங்கியுள்ளனர். இனிமேல் போலீஸார் 100 சதவீதம் வீட்டுக்கே நேரில் சென்று ஆவணங்களை சரிபார்ப்பார்கள்.

சரிபார்ப்பு பணிக்கு வரும் போலீஸ்காரர் லஞ்சம் கேட்டாலோ, வேண்டுமென்றே தவறான தகவல்களைக் கொடுத்தாலோ அவர் மீது பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பதாரர் புகார் அளிக்கலாம். மாநகராட்சி பகுதி என்றால் காவல் ஆணையரிடமும், மற்றவர்கள் எஸ்.பி. அலுவலகத்திலும் புகார் அளிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x