Published : 02 Jul 2017 11:31 AM
Last Updated : 02 Jul 2017 11:31 AM

ஜிஎஸ்டி-யால் விலைவாசி குறையும்; பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் டி.ஜெயக்குமார் நம்பிக்கை

ஜிஎஸ்டி அமல்படுத்தப்படுவதால் விலைவாசி குறையும், பொது மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது. சென்னை தலைமைச் செய லகத்தில் ஜிஎஸ்டி குறித்து நிருபர்களிடம் நிதி அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று கூறிய தாவது:

5 ஆண்டு நடைமுறை

மாநில அரசின் வருவாய், ஜிஎஸ்டியால் பாதிக்கப்பட் டால் அதற்கான இழப்பீட்டு தொகையை 2 மாதத்துக்கு ஒருமுறை கணக்கீடு செய்து மத்திய அரசு கொடுத்துவிடும். இது சட்டமாகவும் இயற்றப் பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்த நடை முறை செயல்பாட்டில் இருக் கும்.

ஜிஎஸ்டி அமல்படுத்தப் படுவதால் விலைவாசி நிச்சயம் குறையும். உதாரணமாக, நாக்பூரில் உற்பத்தி செய்யப்படும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருள், பல மாநிலங்களை தாண்டி தமிழகத்தில் விற்கப் படும்போது பல்வேறு விதமான வரிகள் அதன்மீது விதிக்கப்பட்டு, ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 447 ரூபாய்க்கு விற்கப்படும். ஜிஎஸ்டிக்கு பிறகு அந்தப் பொருள் ஒரு லட்சத்து 35 ஆயி ரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். எனவே, ஜிஎஸ்டி குறித்து பொதுமக்கள், வணி கர்கள் அச்சப்பட தேவையில்லை. 148 நாடுகளில் ஜிஎஸ்டி நடை முறையில் உள்ளது.

திரைத்துறை கோரிக்கை

ரூ.100-க்கு மேல் டிக்கெட் கட்டணம் உள்ள திரையரங்கு களுக்கு 28 சதவீதமும், ரூ.100-க்கு கீழ் 18 சதவீதமும் வரி விதிக் கப்படுகிறது. திரைத்துறை கேளிக்கை வரியின் கீழ் வந்து விடுவதால் இதற்கு விலக்கு அளிக்க முடியாது. திரைத் துறையினரின் கோரிக்கைகள், டிக்கெட் விலை குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும்.

பட்டாசு, தீப்பெட்டி தொழில் களுக்கு விதிக்கப்பட்டுள்ள கூடுதல் வரி குறித்து ஆலோ சனை நடத்தி வருகிறோம். ஜிஎஸ்டியால் வருவாய், வேலை இழப்பு ஏற்பட்டால் அதுகுறித்து மீண்டும் ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மாதந்தோறும் நடத்தப்படும். அந்தக் கூட்டத்தில் பிரச்சினை கள் குறித்து பேசி முடிவு எடுக்கப்படும்.

ஜிஎஸ்டியால் வரி ஏய்ப்பு செய்வது குறையும். ஒரு பொருளின் விலையை யாரும் அதிகப்படுத்தி விற்க முடியாது. வரியை வைத்து லாபம் சம்பாதிக்க நினைத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஜிஎஸ்டி குறித்து வணிகர்கள் அறிந்து கொள்வதற்காக மாநில அளவில் ஒரு கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட அளவில் 41 இடங்களிலும், வட்ட அளவில் 668 இடங்களிலும் சிறப்புக் கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

பேட்டியின்போது வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி உடனிருந்தார்.

இலவச தொலைபேசி சேவை

வணிகர்கள், பொதுமக்கள் ஜிஎஸ்டி குறித்த சந்தேகங்களுக்கு 1800 1036751 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பேசலாம். இது 24 மணி நேரம் செயல்படும் தொலைபேசி சேவை ஆகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x