

கோவையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில், விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவையில் உள்ள சிபிஎம் அலுவலகம் மீது கடந்த 17-ம் தேதி அதிகாலை மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதுகுறித்து ரத்தினபுரி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் கோவை சிவானந்தா காலனி பகுதி யில் வாகனத் தணிக்கை யில் ஈடுபட்டிருந்த போலீஸார், பெட் ரோல் குண்டு வீசிய வழக்கில் தொடர்புடையதாக ஒருவரை பிடித் தனர். அவர், மேட்டுப்பாளையத் தைச் சேர்ந்த சரவணக்குமார்(37) என்பதும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் வடக்கு மாவட்ட அமைப்பாளராக இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவு அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
200 சிசிடிவி பதிவுகள் ஆய்வு
இதுகுறித்து போலீஸார் கூறும் போது, ‘சம்பவம் நடைபெற்ற கட்சி அலுவலகத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால், அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஆய்வு செய்தோம். அதில் சந்தேகப் படும்படியான நபரின் புகைப்படம் பதிவானதையடுத்து, அவ்வழியா கச் செல்லும் சாலைகளில் உள்ள கேமராக்களை ஆய்வு செய்தோம். அதில் மேட்டுப்பாளையம் சாலை யில் அந்த வாகனம் சென்றது தெரியவந்தது.
பின்பக்க நம்பர் பிளேட் அகற் றப்பட்டு, முன்பக்க ஸ்டிக்கர்கள் கிழிக்கப்பட்டிருந்தன. நம்பர் பிளேட் திருகாணிகளில் இருந்த வேறுபாடு உள்ளிட்டவற்றை சுமார் 200 சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப் படையில் உறுதி செய்தோம். வாகன சோதனையில் இந்த அடை யாளங்களை உறுதிப்படுத்திய பிறகே, வாகனத்தை ஓட்டிவந்த அதன் உரிமையாளர் சரவணக் குமாரை கைது செய்தோம்’ என்றனர்.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சி யின் முன்னாள் எம்பியும், மாநிலக் குழு உறுப்பினருமான பி.ஆர்.நட ராசன் தலைமையில் அக்கட்சி யினர், நேற்று மாநகர காவல் ஆணை யரை சந்தித்தனர். அப்போது போலீஸாருக்கு அவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
ஒருதலைப்பட்சமானது
விஎச்பி மாநில செய்தித் தொடர்பாளர் ஆர்.லட்சுமண நாராயணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்த வழக்கில் போலீஸ் விசாரணை தொடங்கும் முன்பே இந்து அமைப்பினர்தான் இதற்கு காரணம் என அறிக்கை, கண்டனங் கள் தெரிவித்தனர். இதேரீதியில் போலீஸாருக்கும் அழுத்தம் கொடுத்து உண்மைக் குற்றவாளி களைப் பிடிக்காமல், அவர்கள் விருப்பத்துக்கு ஏற்ப அப்பாவி விஎச்பி இளைஞரை கைது செய்துள்ளனர். இதை வன்மை யாக கண்டிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.