

வளசரவாக்கத்தில் தொழிலதிபரை காரில் கடத்தியதாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் ரெஜி. இவரது நண்பர் கேர ளாவை சேர்ந்த ராஜன். தொழிலதிபர்களான இவர்கள் தொழில் சம்பந்தமாக சென்னை வந்திருந்தனர்.
காரில் வந்தவர்கள்
வளசரவாக்கம் முத்துலட்சுமி நகரில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி இருந்தனர். நேற்று முன்தினம் இரவு இருவரும் விடுதி முன்பு நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது காரில் வந்த 7 பேர் ரெஜி மற்றும் ராஜனை காரில் கடத்த முயன்றனர். இதில் ராஜன் தப்பி ஓடிவிட்டார். ரெஜியை அக்கும்பல் கடத்தி சென்றது.
இதுகுறித்து வளசரவாக்கம் போலீஸாருக்கு தகவல் கொடுக் கப்பட்டது. விரைந்து சென்ற போலீஸார், வாகன சோத னையை தீவிரப்படுத்தி ரெஜியை அம்பத்தூரில் மீட்டனர். கடத்த லில் ஈடுபட்ட 7 பேரையும் கைது செய்தனர். பண விவகாரத் தில் கடத்தல் நடந்துள்ளதாக போலீஸாரின் முதல்கட்ட விசார ணையில் தெரியவந்துள்ளது.