சென்னைவாசிகளே குடையுடன் தயாராக இருங்கள்; இன்று மழை நிச்சயம்: சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்

சென்னைவாசிகளே குடையுடன் தயாராக இருங்கள்; இன்று மழை நிச்சயம்: சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்

Published on

குடையுடன் தயாராக இருங்கள் இன்று நிச்சயம் மழை பெய்யும் என வானிலை முன்னறிவிப்பை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் பிரபல வானிலை வலைபதிவர் தமிழ்நாடு வெதர்மேன் என அழைக்கப்படும் பிரதீப் ஜான்.

அவர் கூறியிருப்பதாவது:

சென்னைவாசிகளுக்கு குடை எச்சரிக்கை இது. தமிழகம் முழுவதும் பரவலாக இன்று மழை பெய்யும். இன்று மழை பெய்யாவிட்டால் வானிலை அறிவிப்புகளை வெளியிடுவதில் எந்த அர்த்தமும் இல்லை.

இந்த நாளுக்காகத்தான் நீண்ட நாள் காத்திருந்தோம். சென்னைக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த வடதமிழகத்துக்கும் மழை வாய்ப்பு இருக்கிறது. கூடுதல் போனஸாக கோவை, நீலகிரி மாவட்டங்களிலும் ஈரோடு, நாமக்கல், திருச்சி போன்ற உள்மாவட்டங்களிலும் மழை பெய்யும். காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்யும். தென் மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இன்று தமிழகத்தில் நீங்கள் இருக்கும் ஏதேனும் பகுதியில் மழை பெய்யாவிட்டால் நீங்கள் துரதிர்ஷ்டசாலி என்றுதான் சொல்ல வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in