

டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரண மாக தாயும், பிறந்து இரண்டு நாளான ஆண் குழந்தையும் இறந்த தாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
பொள்ளாச்சியை அடுத்த தென் குமாரபாளையம் அருகேயுள்ள குறிஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி லூர்துமேரி (26) நிறைமாத கர்ப்பிணியான இவர், கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பாக லூர்துமேரிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாய் மற்றும் குழந்தையின் உடல்நிலை மோசமானதை அடுத்து நேற்று கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இங்கு சிகிச்சை பலனின்றி லூர்துமேரி மற்றும் குழந்தையும் அடுத்தடுத்து உயிரிழந் தனர். இருவரின் சடலங்களும் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
ரத்த அழுத்தம் குறைவு
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அசோகன் கூறியதாவது: பொள்ளாச்சியைச் சேர்ந்த கர்ப்பிணி லூர்துமேரி (23), பிறந்து 2 நாட்களே ஆன அவரது குழந்தை யும் உடல்நலக் குறைவுடன் இருந்துள்ளனர். தனியார் மருத்துவமனையிலேயே குழந்தை இறந்துவிட்டதாகத் தெரிகிறது. குழந்தையின் தாய், நேற்று அதிகாலை கோவை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு வரப்பட்டார். ஆனால் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். தனியார் மருத்துவ மனையில் இருந்து வரும்போது உயிரிழந்ததால் என்ன காரணம் எனத் தெரியவில்லை என்றார்.
அரசு மருத்துவமனை மருத் துவர்களிடம் கேட்டபோது, ‘தனியார் மருத்துவமனை அளித் துள்ள லூர்துமேரியின் மருத்துவப் பரிசோதனை அறிக்கையில், டெங்கு மற்றும் ரத்த அழுத்தக் குறைபாடு இருந்ததாகத் தெரிவிக் கப்பட்டுள்ளது. பல நவீன மருத்துவ சிகிச்சைகள் இருப்பதால் ரத்த அழுத்தக் குறைபாட்டால் உயிரிழப்பது மிகவும் அரிது. இதேபோல, குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக மருத்துவப் பரிசோதனை அறிக்கையில் தெரி வித்துள்ளனர். தாய், சேயை தனித் தனியாக அடக்கம் செய்யக்கூடாது என குடும்பத்தினர் கேட்டுக் கொண்டதற்காக, கோவை அரசு மருத்துவமனையிலேயே இருவரது உடல்களும் வைக்கப்பட்டுள்ளன’ என்றனர்.
மேலும் கோவை அரசு மருத்துவ மனையில் மர்மக்காய்ச்சல் காரணமாக கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 74 பேரும், டெங்கு காய்ச்சல் காரணமாக 9 பேரும் அனுமதிக் கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.