Published : 26 Jul 2017 09:13 AM
Last Updated : 26 Jul 2017 09:13 AM

மருத்துவப் படிப்பு சேர்க்கையில் ரூ.2 கோடி மோசடி?- ஈரான் மாணவர்கள் புகார் மீது விசாரணைக்கு உத்தரவு

முறைகேடாக மருத்துவப் படிப்பு சேர்க்கை நடத்தி ரூ.2 கோடி வரை மோசடி செய்ததாக தனியார் பல் மருத்துவக் கல்லூரி மீது ஈரான் மருத்துவ மாணவர்கள் அளித்துள்ள புகார் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

ஈரான் நாட்டைச் சேர்ந்தவர் ஹமித்ரெசாசாரே. கோவை சிங்காநல்லூரில் தங்கி, சூலூரில் உள்ள தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் இளநிலை பல் மருத்துவப் படிப்பில் கடந்த ஆண்டு சேர்ந்தார். இவரைப் போலவே ஈரானை சேர்ந்த மேலும் 9 மாணவ, மாணவியர் இக்கல்லூரி யில் பல் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். அனைவரும் சிங்காநல்லூர், நஞ்சுண்டாபுரம் பகுதிகளில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், தங்களிடம் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலித்துக் கொண்டு, முறை கேடாக மருத்துவப் படிப்புக்கு சேர்க்கை நடத்தியதாக, சம் பந்தப்பட்ட கல்லூரி மீது ஈரான் மாணவர்கள், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேற்று மனு அளித்தனர். மனுவில், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். ‘‘மருத்துவப் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற கோவை சூலூர் அருகே உள்ள தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவப் படிப்பில் கடந்த ஆண்டு சேர்ந்தோம். 10 பேரும் ரூ.2 கோடிக்கும் கூடுதலாக கட்டணம் செலுத்தியுள்ளோம். அதன் பிறகு 2016 நவம்பர் மாதம், எங்களால் மருத்துவப் படிப்பை தொடர முடியாது என பல்கலைக்கழகம் தெரிவித்தது. ஆனால், பிரச்சினை ஏற்படாது என கல்லூரி நிர்வாகம் கூறிவந்தது.

ஆனால், எங்களால் இங்கு படிப்பை தொடர முடியாது எனக் கூறப்படுவதால் கட்டணத்தை திருப்பித் தருமாறு கேட்கிறோம். தொடக்கத்தில் கட்டணத்தை தருவதாகக் கூறிய கல்லூரி நிர் வாகம், தற்போது மாதக் கணக்கில் அலைக்கழித்து வருகிறது. சொந்த நாட்டுக்குத் திரும்பிச் செல் வதிலும், படிப்பிலும் எங்களது எதிர்காலம் கேள்விக்குறியாகி யுள்ளது. போலீஸார் தலையிட்டு விசாரித்து எங்களது சேர்க்கை கட்டணத்தை திரும்பப் பெற்றுத் தர வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது, ‘கடந்த ஆண்டு தமிழகத்தை தவிர மற்ற பகுதி மருத்துவ மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வில் விலக்கு அளிக்கப்பட்டது.

ஆனால் ‘நீட்’ தேர்வில் பங்கேற்காத ஈரான் மாணவர்களையும் சம் பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் சேர்த்துக் கொண்டதாகக் கூறப்படு கிறது. அதன் காரணமாகவே பல் கலைக்கழகம் அவர்களது சேர்க் கையை ரத்து செய்திருக்கிறது. இது குறித்து விசாரித்து வருகிறோம்’ என்றனர். இந்த புகார் மீது கருமத்தம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் மூலமாக விசாரணை நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x