Published : 03 Jul 2017 08:34 AM
Last Updated : 03 Jul 2017 08:34 AM

திருவள்ளூர் மாவட்டத்தில் அதிரடி சோதனை: ரூ. 9.25 லட்சம் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சிக்கின - போலீஸார் 11 பேரை கைது செய்தனர்

திருவள்ளூர் மாவட்டத்தில் போலீஸ் அதிரடி சோதனையில் ரூ.9.25 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட் கள் சிக்கின. இது தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்ட காவல்துறையினர் மற் றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளில் அதிரடி சோதனை மேற்கொண்டு, பதுக்கி வைக்கப்பட்டுள்ள தடைசெய் யப்பட்ட புகையிலை பொருட் களைப் பறிமுதல் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவும் அதிரடி சோதனை நடைபெற்றது.

திருவள்ளூர் டவுன் போலீஸார் திருவள்ளூர் சத்தியமூர்த்தி தெரு வில் உள்ள தனியார் சேமிப்பு கிடங்குகளில் சோதனை செய்தனர். அப்போது 22 பெட்டிகள் மற்றும் 4 சாக்குப் பைகளில் ரூ.1.70 லட்சம் மதிப்புள்ள புகை யிலை பொருட்கள் பதுக்கி வைக் கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சதீஷ்(33), ஜர்சிங்(20), ராஜன்(32), ரமேஷ்(24), லட்சுமணன்(29), மற்றொரு ரமேஷ்(23) பிரதாப்(24), ஓம் பிரகாஷ்(24) ஆகிய 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அதேபோல், திருவாலங்காடு சாலை சந்திப்பில் கே.கே.சத்திரம் போலீஸ் வாகன சோதனையில் ஈடுபட்டபோது கே.கே.சத்திரத் தைச் சேர்ந்த சந்திரன்(40) என்பவர், மோட்டார் சைக்கிளில் 47 சிறிய பெட்டிகளில் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை எடுத்துச் சென்றது தெரியவந்தது. அந்த புகையிலை பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீஸார், சந்திரனைக் கைது செய்தனர்.

மேலும், சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், புதுவாயல் சாலை சந்திப்பில் கவரப்பேட்டை போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அச்சோதனையில், பொன்னேரி மற்றும் பஞ்செட்டி பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார்(32), மாசிலாமணி(55) ஆகியோர் காரில் 99 பெட்டிகளில் ரூ.7.50 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை எடுத்துச் சென்றது தெரியவந்தது. அவற்றையும் காரையும் பறிமுதல் செய்த போலீஸார், சதீஷ்குமார், மாசிலாமணி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x