

பக்கிங்ஹாம் கால்வாய், கொசஸ் தலை ஆற்றில் கொட்டப்பட்ட சாம்பல் கழிவுகளை தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகம் அப்புறப்படுத்த வேண்டும் என தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
எண்ணூருக்கு அருகில் வடசென்னை அனல்மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதிலிருந்து உருவாகும் நிலக்கரி சாம்பலை அனல்மின் நிலையத்துக்கு அருகி லுள்ள பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் கொட்டி வந்தது. இதைத் தடுத்து நிறுத்த நட வடிக்கை எடுக்கக்கோரி ரவிமாறன் என்பவர் சென்னையில் உள்ள தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பா யத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜோதி மணி மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் பி.எஸ்.ராவ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வடசென்னை முழுவதும் பக்கிங்ஹாம் கால்வாய், கொசஸ்தலை ஆற்றில் சாம்பல் கொட்டப்பட்ட இடங்களை மனு தாரர் தரப்பு வழக்கறிஞர் திரை யிட்டுக் காண்பித்தார்.
அதைப் பார்த்த நீதிபதிகள், “இதுதொடர்பாக மாசுக்கட்டுப் பாட்டு வாரியம் எடுத்த நட வடிக்கை என்ன” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு மாசுக்கட்டுப் பாட்டு வாரியம் சார்பில் அளிக்கப் பட்ட பதில் மனுவில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர் மானக் கழகத்துக்கு சாம்பல் கழிவுகளை உடனடியாக அகற்று மாறு எழுதப்பட்ட கடிதம் இணைக் கப்பட்டிருந்தது
அதன் பின்னர் தீர்ப்பாய உறுப் பினர்கள், “பக்கிங்காம் கால்வாய், கொசஸ்தலை ஆற்றில் கொட்டப் பட்ட சாம்பல் கழிவுகளை மின் வாரி யம் அப்புறப்படுத்த வேண்டும். அதனை செய்ய தவறும்பட்சத்தில், வட சென்னை அனல் மின் நிலையத்தின் 2 அலகுகளையும் மூடுவதற்கு தீர்ப்பாயம் உத்தர விடும்” என்று தெரிவித்து, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.