

தாம்பரம் விமானப்படை தளத் தில் பணிபுரியும் விமானப்படை ஊழியர்களின் மனைவியர்களை உறுப்பினர்களாக கொண்ட நலச்சங்கம் ஒன்று உள்ளது. இச்சங்கத்தின் சார்பில் நேற்று சென்னை தீவுத் திடலில் ‘பிங்கத்தான்’ என்ற பெயரில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
ஆரோக்கியமான குடும்பம், ஆரோக்கியமான தேசம் மற்றும் ஆரோக்கியமான உலகம் ஆகியவை அதிகாரம் பெற்ற பெண்கள் மூலம் உருவாகும் என்ற கருப்பொருளை மையமாக வைத்து இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த ஓட்டத்தில் விமானப் படை அதிகாரிகள் மற்றும் ஊழி யர்களின் மனைவியர் ஏராள மானோர் பங்கேற்றனர்.