Published : 31 Jul 2017 10:32 AM
Last Updated : 31 Jul 2017 10:32 AM

வேறு ரத்த பிரிவாக இருந்தாலும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வது சாத்தியமே: மியாட் மருத்துவமனை மருத்துவர் தகவல்

வேறு ரத்தப் பிரிவாக இருந்தாலும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்று மியாட் மருத்துவமனை சிறுநீரகவியல் துறை இயக்குநர் டாக்டர் ராஜன் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

சிறுநீரகம் செயலிழந்தவருக்கு தாய், தந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை உள்ளிட்ட ரத்த சொந்தம் உள்ளவர்கள் யாராவது தங்களுடைய சிறுநீரகத்தை தானம் கொடுக்கின்றனர். இவை தவிர மூளைச்சாவு அடைந்தவர்கள் தானம் கொடுக்கும் சிறுநீரகத்தின் மூலமும் அவருக்கு மறுவாழ்வு கிடைக்கிறது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ரத்தப் பிரிவு முக்கியமாகும்.

ரத்தப் பிரிவு பொருந்தவில்லை என்றால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலை இருந்தது. சிறுநீரகம் தானமாகக் கிடைத்தும் ரத்தப் பிரிவு பொருந்தாததால் நோயாளிகள் ஆண்டுக்கணக்கில் ரத்த சுத்திகரிப்பு செய்துக் கொண் டிருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 1989-ம் ஆண்டு ஜப்பான் நாட்டு தலைநக ரான டோக்கியோவில் உள்ள டோக்கியோ பெண்கள் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் (மருத்துவ மனை) வேறு ரத்தப் பிரிவு கொண்ட வரின் சிறுநீரகத்தை அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகம் செய லிழந்தவருக்கு பொருத்தப்பட்டது. அந்த பல்கலைக்கழகத்தின் தலைவ ரும் சிறுநீரக சிகிச்சை நிபுணரு மான டாக்டர் கசுவாகி டனாபே அந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை செய்தார். இதுவரை அவர் வேறு ரத்தப் பிரிவைக் கொண்டு 2000-க்கும் மேற்பட்ட சிறுநீராக மாற்று அறுவை சிகிச்சை களைச் செய்து சாதனை படைத் துள்ளார்.

ஆண்டுக்கு 60 அறுவை சிகிச்சை

அந்தப் பல்கலைக்கழகத்தைப் பின்பற்றி மியாட் மருத்துவமனை யில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் வேறு ரத்தப் பிரிவு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப் பட்டு வருகிறது. 5 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட் டால், அதில் ஒன்று வேறு ரத்தப் பிரிவு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையாகும். இந்த மருத்துவமனையில் ஆண்டுக்கு சுமார் 60 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெறுகிறது. டோக்கியோவில் வேறு ரத்தப் பிரிவு சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்துக் கொண்டவர்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக நலமாக இருக்கிறார்கள். இந்த மருத்துவ மனையில் வேறு ரத்தப் பிரிவு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துக் கொண்டவர்களும் 5 ஆண்டுகளாக நலமுடன் உள்ளனர்.

90 சதவீத வெற்றி

சாதாரண சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை விட, இந்த வேறு ரத்தப் பிரிவு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை சற்று கடினமானது. செலவும் இரண்டு மடங்கு அதிகம். வேறு ரத்தப் பிரிவு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பு, முதலில் ரத்தத்தில் உள்ள ஆண்டிபாடிகள் (புரதம்) அகற்றப்படும். அதன்பின் சிறுநீரகம் பொருத்தப்படும். சாதாரண சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையைப் போலவே, இந்த வேறு ரத்தப் பிரிவு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் 90 சதவீதம் வெற்றியைக் கொடுக்கிறது. இந்தியாவில் சில மருத்துவமனைகளில் மட்டுமே வேறு ரத்தப் பிரிவு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. இதுபற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உடல் உறுப்பு தானம்

பேட்டியின் போது உடன் இருந்த டோக்கியோ பெண்கள் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் தலைவரும் சிறுநீரக சிகிச்சை நிபுணருமான டாக்டர் கசுவாகி டனாபே கூறியதாவது: “தமிழகத்தில் மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகள் தானம் அதிகமாக இருக்கிறது. அதன்மூலம் மாற்று அறுவை சிகிச்சைகள் அதிகம் நடைபெறுகிறது. எங்கள் நாட்டில் 10 சதவீதம் மட்டுமே உடல் உறுப்புகள் தானம் இருக்கிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x