

துணைநிலை ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரியிலிருந்து வெளியேறக் கோரி காங்கிரஸார் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் அரசு பரிந் துரைக்காமல், பாஜகவினர் 3 பேரை ஆளுநர் கிரண்பேடி பரிந் துரை செய்து, மத்திய அரசு ஒப் புதலுடன் நியமன எம்எல்ஏக்களாக நியமித்துள்ளார். இதற்கு ஆளும் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரி வித்து காங்கிரஸார் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வில்லியனூர் கொம் யூன் பஞ்சாயத்து எதிரில் இந்த உண்ணாவிரதம் நடைபெற்றது. போராட்டத்துக்கு காங்கிரஸ் மாநில செயலாளர் செந்தில்குமரன் தலைமை தாங்கினார்.
போராட்டத்தை புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவரும், பொதுப்பணித்துறை அமைச்சரு மான நமச்சிவாயம் தொடங்கி வைத்தார். ஆளுநர் வெளியேறும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர் தெரிவித்தார்.
குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து, ஆளுநர் மீது புகார் தெரிவிக்க முதல்வர் நாராயண சாமி நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். ஆளுநர் கிரண்பேடியும் குஜராத் சென்றுள்ளார். அவர் டெல்லி செல்ல வாய்ப்புள்ளதாக தெரிகிறது.