

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம், மீன்வள பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர் தேர்வுக் குழு தொடர்பாக சட்டத் திருத்த மசோதாக்கள் சட்டப்பேர வையில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டன.
பல்கலைக்கழங்களில் துணை வேந்தரின் பதவிக் காலம் முடியும் முன்பே தேர்வுக் குழுவை அமைப் பது, குழுவில் இடம்பெறுவோரின் தகுதிகள், துணைவேந்தரின் தகுதி கள் தொடர்பாக பல்கலைக்கழக சட்டங்களில் திருத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, தமிழகத்தில் உள்ள சென்னை, அண்ணா, மதுரை காமராசர், அண்ணாமலை, அழகப்பா உள்ளிட்ட 12 பல்கலைக் கழக சட்டங்களிலும் திருத்தம் செய்வதற்கான மசோ தாக்கள் கடந்த சனிக்கிழமை சட்டப் பேரவையில் அறிமுகம் செய்யப் பட்டன.
அதேபோல தமிழ், சட்டம், மீன்வள பல்கலைக்கழகங்களின் சட்டங்களிலும் திருத்தம் செய் யப்படுகிறது. அதற்கான மசோ தாக்கள், சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டன.
துணைவேந்தர் பதவி காலியா வதற்கு 6 மாதங்களுக்கு முன்பு தேர்வுக் குழு உறுப் பினர்கள் நியமிக்கப்பட வேண்டும். அப்பணி 4 மாதங்களுக்கு முன் முடிய வேண்டும். துணைவேந்தர் பதவிக்கு தகுதியானவர்கள் பட்டி யலை தயாரிக்கும் நடைமுறையை 4 மாதங்களுக்கு முன் தொடங்க வேண்டும். குழு அமைக்கப்பட்ட 4 மாதங்களில் பல்கலைக்கழக வேந்தருக்கு பரிந்துரையை அனுப்ப வேண்டும் என மசோதா வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.