தஞ்சாவூர் விபத்தில் காயமடைந்த மேலும் ஒரு கல்லூரி மாணவி பலி: வேலூர் விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

தஞ்சாவூர் விபத்தில் காயமடைந்த மேலும் ஒரு கல்லூரி மாணவி பலி: வேலூர் விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

தஞ்சாவூர் அருகே நேற்று முன்தினம் இரவு மினி வேன் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் மேலும் ஒரு கல்லூரி மாணவி நேற்று உயிரிழந்தார். இந்த விபத்தில் பலியானோர் எண் ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது.

திருப்பூரில் இருந்து நேற்று முன்தினம் கும்பகோணம் நோக் கிப் புறப்பட்ட அரசுப் பேருந்து ஒன்று, இரவு 7 மணியளவில் தஞ்சாவூர் அருகே வல்லம் பகுதியில் சாலையோரம் பழுதாகி நின்றிருந்த மினி வேன் மீது மோதியது. இதில், மினி வேனில் இருந்த இரும்புக் கம்பிகள் பேருந்தின் முன்பகுதியில் இருந்த வர்கள் மீது குத்தியதில், அரசுப் பேருந்து ஓட்டுநர் பல்லடம் ரவிச்சந்திரன், மினி வேன் ஓட்டுநர் திருச்சி உறையூரைச் சேர்ந்த சதீஷ்குமார், பேருந்தில் பயணித்த பூங்குழலி(40), அருள்மொழி(38), மாலினி(19), ஆனந்தி(20), ஹேம லதா(28), துர்க்காதேவி(20), தமிழ்பிரியா(19) ஆகிய 9 பேர் உயிரிழந்தனர்.

காயமடைந்த 24 பேர் மருத்துவ மனைகளில் சேர்க்கப்பட்டனர். இதில், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட கல்லூரி மாணவி புவனா(21) இறந்தார். இதையடுத்து, பலியானோர் எண் ணிக்கை 10 ஆனது.

இந்த விபத்தில் உயிரிழந்த ஆனந்தி, துர்க்காதேவி, தமிழ் பிரியா, புவனா ஆகியோர் சமய புரத்தில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகள். மற்றொரு மாணவி மாலினி திருச்சி தனியார் கல்லூரியில் பயின்று வந்தார்.

காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய வேளாண் அமைச் சர் ஆர்.துரைக்கண்ணு, விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், உயிரிழந் தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சமும் நிவாரணம் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாகக் கூறினார்.

வாலாஜா அருகே விபத்து

இதற்கிடையே, வேலூர் மாவட்டம் ஓச்சேரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வேன் மீது கார் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறிய தாவது: பெங்களூருவைச் சேர்ந்த விஸ்வேஸ்வரன்(51) என்பவர், மனைவி ஹேம ரத்னா(45), மகன் கிரீஷ்(28), மகள் நவ்யா(29) மற்றும் 5 வயது பேத்தி யா ஆகி யோருடன் சென்னைக்கு காரில் வந்தார். காரை அவரது மருமகன் தியாகராஜன்(37) இயக்கினார்.

ஓச்சேரி களத்தூர் அருகே, இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றார். அவர் மீது மோதாமல் இருக்க காரை திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே வந்த வேன் மீது மோதியது.

இதில், தியாகராஜன், ஹேம ரத்னா, கிரீஷ் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 5 பேர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனை மற்றும் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர் என்று கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in