Last Updated : 24 Jul, 2017 12:04 PM

 

Published : 24 Jul 2017 12:04 PM
Last Updated : 24 Jul 2017 12:04 PM

தினம் தினம் படகுப் பயணம்: கல்விக்காக ஆபத்தை உணராத குழந்தைகள்

பழவேற்காடு ஏரிக்கரையின் அருகான ஒரு தீவிலிருந்து ஒவ்வொரு நாளும் ஆபத்தான படகுப் பயணத்தை கல்விக்காக மேற்கொண்டு வருகிறார்கள் ‘இருக்கம்’ கிராமத்துக் குழந்தைகள்.

பழவேற்காடு ஏரியின் நீரைக்கிழித்துக்கொண்டு செல்கிறது அந்த மோட்டார் படகு நுரைகளை உண்டாக்கிச் செல்கிறது. அதிகப்படியான சுமையை ஏற்றிக் கொண்டு முகத்துவார நீரில் சவாரி செல்லும் படகில் உள்ள அந்த 150 குழந்தைகளும் அப்படி செல்வதில் உள்ள ஆபத்தை கவனிக்கத் தவறுகின்றனர்.

படகோட்டி தவிர, அவர்கள் அனைவரும் பள்ளி செல்லும் குழந்தைகள். அவர்கள் பள்ளியிலிருந்து வெளியே சுற்றுலா ஏதும் செல்லவில்லை. ஒவ்வொருநாளும் பள்ளியை நோக்கிச் செல்கின்றனர்.

பழவேற்காடு அருகே வங்காள விரிகுடாவின் முகத்துவாரத்தில் துருத்தி நிற்கிற்து, ஒடுங்கிய நிலப்பகுதியான அந்த இருக்கம் எனும் குக்கிராமம். இக் கிராமத்தின் இக்குழந்தைகள் கும்மிடிப்பூண்டி தாலுகாவில் உள்ள ஆரம்பாக்கம் மற்றும் ஒபாசமுத்திரம் தமிழ்ப் பள்ளிகளில் பயில ஒவ்வொரு நாளும் ஆபத்தான படகுப் பயணம் மேற்கொள்கின்றனர்.

இருக்கம் 7 சதுரகிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஓர் ஆந்திர கிராமம். இங்கு வீட்டிலும் சந்தையிலும் தமிழ்தான் பேசுகிறார்கள், எனினும் இவர்களுக்கு பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி வழங்கப்படவில்லை.

திருவள்ளுவர் மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு லைப் ஜாக்கெட் எனப்படும் பாதுகாப்பு உபகரணத்தை வழங்கியது. ஆனால் இக்குழந்தைகள் படகில் செல்லும்போது அதை அணிந்துகொண்டு செல்வதில்லை. இந்தப் படகுகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் இருந்தபோதிலும் மரச்சட்டங்களைக் கொண்டு இரும்புக் கம்பிகளை இணைத்து இப்படகுகளில் உண்மையில் பாதுகாப்பில்லை.

சட்டங்களில் அமர்ந்திருக்கிறார்கள் மிகவும் குறைவான வயதுடைய குழந்தைகள். இவர்களை நிலைகுலைய வாய்ப்புள்ள, சுற்றிலுமுள்ள இரும்புக்கம்பிகளின்மீது சார்ந்திருக்கும் சற்று வளர்ந்த குழந்தைகள் பார்த்துக்கொள்கின்றனர். பயணத்தின் குதூகலத்தில் இதில் உள்ள ஆபத்தை அவர்கள் உணர்வதில்லை.

மேலும் இக்குழந்தைகள் பாடபுத்தக உரையாடல்களில் மிகுந்த ஈடுபாட்டோடு தங்கள் சூழ்நிலையை மறந்துவிடுகின்றனர். ஒவ்வொரு முறையும் அதிகப்படியான குழந்தைகளை ஏற்றிக்கொண்டு செல்லும் இந்த படகுப் பயணத்திற்கு ஒரு மணிநேரம் ஆகிறது.

இருக்கம் கிராமத்தைப் பொறுத்தவரை அங்குள்ள 300 குடும்பங்களுக்கும் தொழில் என்றால் அது விவசாயம் மற்றும மீன்பிடித்தலும்தான். இம்மக்கள், தங்கள் அன்றாட வாழ்க்கைக்காக தினம் தினம் தமிழக கடலை ஒட்டியுள்ள கிராமங்களுக்குச் செல்கிறார்கள். ஆந்திர அரசு நிர்வகிக்கும் 6 மோட்டார் படகுகளில் தினம் தினம் சென்றுதான் அவர்கள் தாங்கள் பிடித்த அல்ல உற்பத்தி செய்த பொருட்களை அங்கு சென்று அவர்கள் விற்பனை செய்யவும் வேண்டும்.

தமிழ்நாடு அரசு மாதத்திற்கு படகுசெலவுக்கான உதவித் தொகையாக தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு என்று ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.300 வழங்குகிறது. மூத்த மாணவர்கள் தங்கள் செலவுகளை தாங்களை செய்துகொள்ளும்வகையில் தலா ஒரு மாணவருக்கு ரூ.600 லிருந்து ரூ.900 வரை மாதம் ஒன்றுக்கு வழங்கப்படுகிறது.

ஆபத்தான படகுப் பயணத்தின் நிகழ்காலம் குறித்த அச்சம் இருக்கத்தான் செயகிறது என்றாலும், குழந்தைகளின் எதிர்காலம் குறித்த பெற்றோர்களின் ஆசைகள் அதை வென்றெடுத்துவிடுகிறது என்பதுதான் கையிலுள்ள உண்மை.

தமிழாக்கம் : பால்நிலவன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x