

திரைப்படங்களில் நடித்தும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி களில் பங்கேற்றும் வருபவர் நடிகர் பாலாஜி. இவரது மனைவி நித்யா. இருவருக்கும் திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. 6 வயதில் பெண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மே மாதம் 23-ம் தேதி மாதவரம் காவல் நிலையத்தில் கணவர் மீது நித்யா புகார் கொடுத்தார்.
அந்தப் புகார் மனுவில், தினமும் மது அருந்தி வந்து தன்னை அடித்து துன்புறுத்துகிறார். இவர் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பதை மறைத்து என்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார் என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்க போலீஸார் மறுப்பதாகக் கூறி, 1-ம் தேதி காவல் ஆணையர் அலுவலகத் தில் நித்யா புகார் கொடுத்துச் சென் றார். அதைத் தொடர்ந்து பாலாஜி மீது பெண் வன்கொடுமைச் சட்டம், கொலை மிரட்டல், ஆபத்து ஏற்படுத்தும் வகையில் தாக்குதல், ஆபாசமாக திட்டுதல் ஆகிய 4 பிரிவுகளில் மாதவரம் காவல் நிலையத்தில் நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது.