அடுத்தடுத்த வெற்றிகளில் திளைக்கும் இஸ்ரோ: மேலும் 2 செயற்கைகோள்களை ஏவ ஆயத்தம்

அடுத்தடுத்த வெற்றிகளில் திளைக்கும் இஸ்ரோ: மேலும் 2 செயற்கைகோள்களை ஏவ ஆயத்தம்
Updated on
1 min read

செயற்கைகோள்களை விண்ணில் செலுத்துவதில் அடுத்தடுத்த மிகப் பெரிய வெற்றிகளை கண்டுவரும் இந்திய வெண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), இந்தாண்டு மேலும் 2 செயற்கைகோள்களை ஏவ ஆயத்தமாகி வருகிறது.

ராக்கெட் தொழில்நுட்பம், கிரையோஜெனிக் தொழில்நுட்பம், சூப்பர் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் என பல தொழில்நுட்பங்கள் வளர்ந்த நாடுகளால் இந்தியா வுக்கு மறுக்கப்பட்ட போதும், சொந்த முயற்சியில் டிஆர்டிஓ, இஸ்ரோ ஆகியவை அவற்றை உருவாக்கி பயன்படுத்தி வரு கின்றன. முதலில் சிறிய வகை எஸ்எல்வி ராக்கெட் மூலம் சிறிய செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி வந்த இஸ்ரோ, தற் போது 4 டன் எடை கொண்ட பெரிய செயற்கைகோள்களை செலுத்த வல்ல ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டை பரிசோதித்து வெற்றி கண்டுள்ளது. சந்திரன், செவ்வாய் கிரகம் ஆகியவற்றுக்கும் செயற்கைகோள்களை அனுப்பி யுள்ளது.

அடுத்தடுத்த வெற்றி

கடந்த டிசம்பர் மாதம் முதல் 6 செயற்கைகோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது. அதில் 3 செயற்கைகோள்கள் (ரிசோர்ஸ்சாட்-2ஏ, இரண்டு கார்டோசாட்-2 செயற்கைகோள் கள்) பிஎஸ்எல்வி வகை ராக் கெட்டுகள் மூலமும், ஒரு செயற்கை கோள் (ஜிசாட்-9) ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலமும், ஒரு செயற்கை கோள் (ஜிசாட்-19) ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலமும் செலுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு ராக்கெட்டான ஏரியன் ராக்கெட் மூலம் ஒரு செயற்கைகோள் (ஜிசாட்-17) செலுத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளன.

பிப்ரவரி 15-ம் தேதி ஏவப்பட்ட பிஎஸ்எல்வி-சி37 ராக்கெட்டில், கார்டோசாட்-2 செயற்கை கோளுடன் மொத்தம் 104 செயற்கை கோள்கள் ஒரே சமயத்தில் ஏவப் பட்டன. இது உலக சாதனையாகும். மே 5-ல் ஏவப்பட்ட ஜிசாட்-9 செயற்கைகோள் தெற்கு ஆசிய பகுதிகளில் உள்ள அனைத்து நாடு களுக்கும் பயன்படும் வகையில் செலுத்தப்பட்டது. அது தெற் காசியாவுக்கு இந்தியா அளித்த பரிசு என வர்ணிக்கப்பட்டது.

மேலும் 2 செயற்கைகோள்கள்

இவ்வாறு தொடர்ந்து வெற்றி களை குவித்து வரும் இஸ்ரோ, இந்தாண்டு மேலும் 2 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தும் பணிகளை மேற்கொண்டு வரு கிறது. பிஎஸ்எல்வி-சி39 ராக்கெட் மூலம் ஐஆர்என்எஸ்எஸ்-1எச் (IRNSS-1H) செயற்கைகோளை ஆகஸ்ட் மாதத்தில் இஸ்ரோ செலுத்தவுள்ளது. இந்த செயற்கைகோள் போக்குவரத்து வழிகாட்டி (Navigation) வகை செயற்கைகோளாகும்.

இதேபோல ஜிஎஸ்எல்வி-எஃப்08 ராக்கெட் மூலம் ஜிசாட்-6ஏ செயற்கைகோள் இந்தாண்டின் இறுதி காலாண்டில் (அக்டோபர் டிசம்பர்) செலுத்தவும் ஆயத்தப் பணிகளை இஸ்ரோ செய்து வருகிறது. இது தொலைதொடர்புக்கு உதவும் செயற்கைகோளாகும்.

மேலும் சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா செயற்கைகோள், சந்திராயன் 2 செயற்கைகோள், வெள்ளி கிரக ஆய்வு செயற்கைகோள் என தொடர்ந்து செயற்கைகோள்களை செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in